Header Ads



''முஸ்லிம்கள் தமது தனித்துவங்களை பேணி, தலைநிமிர்ந்து வாழ்வது அவசியம்''

முஸ்லிம்கள் இந்த நாட்டில் தமது தனித்துவங்களை பேணிய நிலையிலும் அதே வேளை பிற சமூகங்களுடன்சகவாழ்வைப் பேணியும் தலைநிமிர்ந்தும் வாழ்வது அவசியமாகும். இவ் இலக்கை அடைய வேண்டுமாயின் அவர்கள் ஆற்ற வேண்டிய பல கடமைகள் இருக்கின்றன. தமக்குள் ஐக்கியமாக இருக்க வேண்டும். அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிற சமூகங்களுடன் நீதி, நியாமாகவும், அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்தும் வாழ்வது இன்றியமையாது.  என தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்-ஷேக் பளீல் (நளீமி) தெரிவித்தார்.

தேசிய ஷூறா சபையின் மாத்தறை மாவட்ட முஸ்லிம் சமூக தலைமைகளுக்கான சகவாழ்வு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18.10.2014) மாத்தறை கடவீதி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் புதல்வரும் தேசிய ஷூறா சபையின் தலைவருமான தாரிக் மஹ்மூத் அவர்கள் தலைமையில் இன்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்நிகழ்வில் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த உலமாக்கள், மஸ்ஜித்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், துறை சார் நிபுணர்கள், அரச சேவை உத்தியோகத்தர்கள், இஸ்லாமிய மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், வியாபாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகநலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அஷ்-ஷேக் பளீல் (நளீமி) அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்; முஸ்லிம்கள் சோதனைகள், நெருக்கடியான நிலைமைகள் ஏற்படும் போது அவை அல்லாஹ்வின் நியதிகள் என்று நினைப்பதும் அவனிடம் உதவி வேண்டி திக்ருகளில் ஈடுபடுவதும் துன்பங்களை விளைவிப்போருக்கு துன்பம் விளைவிக்காமல் உதவிகளால் அவர்களை எதிர்கொள்வதும் இஸ்லாம் காட்டித்தரும் ஆன்மிக ரீதியானமற்றும் பண்பாடு ரீதியான அணுகுமுறையாகும். 

பிற சமூகத்தவர்கள் செய்யும் பொது காரியங்களில் அவர்களுக்குஒத்துழைப்பு நல்குவது சமாதான சகவாழ்வுக்கு வழிவகுக்கும். முஸ்லிம் சமூகம் பண்பாட்டுடன் எந்த இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்லி இருக்கின்றதோ அது போல் நடந்து 
​மிகவும்அவசியமானதாகும். 

ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் தமதுதனித்துவங்களையே  மார்க்கத்தின் அடிப்படையான ஒழுக்க விழுமியங்களையே விட்டுக் கொடுக்காமல் தான்சகவாழ்வைப் பேண வேண்டும்  என அவர் தெரிவித்தார்.

தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.ஸுஹைர் உரையாற்றும் போது; 

இன்று இந்நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு அணுகவேண்டும் என்பது தொடர்பாக பல வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் தமது சமய, கலாசார, விழுமியங்களை பாதுகாப்பதுடன் பிற சமூகங்களுடன் அந்நியோன்யமாகவும் வாழ வேண்டும்.

எமது முன்னோர் இந் நாட்டில் தேசிய சமூகங்களுடன் மிகவும் நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் நம்பிக்கை, நானயமானவர்களாகவும், உதாரண புருஷர்களாக வாழ்ந்து தேச கட்டுமான பணிக்கு பாரிய சேவையற்றியுள்ளார்கள். 

இவ்வாறான சுமூகமான உறவு பிற சமூகங்களுடன் நிலவும் போது எமது சமூகம் பற்றிய பிற சமூகங்களின் சந்தேகங்கள் நீங்குவதுடன் எமக்கும் அவர்களுத்குமிடையிலான பதற்ற நிலை அகன்று விடும். இந் நிலை இந்நாட்டில் இறைவன் பாதுகாப்புக்கு அடுத்த படியான பாதுகாப்பாக அமையும்.

எமது நாட்டு சட்ட யாப்பில் சிறுபான்மை சமூகம் என்றவகையில் எமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கூட அதை மாத்திரம் நாடிச் செல்வது தீர்வாக அமையாது. இதைவிட பெரும்பான்மை சமூகங்களுடனான சகவாழ்வே காலத்தின் தேவையாகவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஷூறா சபையின் மத்திய செயற்குழு உறுப்பினரும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவரும் சட்டத்தரணியுமான ரஷீத் எம். இம்தியாஸ் சமகாலத்தில் இனங்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதற்கான காரணமும், பின்புலமும் என்ற தலைப்பில்உரையாற்றினார்.

இதற்கு முன்னர் குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் சகவாழ்வு தொடர்பான கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்மற்றும் இஸ்லாம் கூறும்  சகவாழ்வு மற்றும் சட்ட ஒழுங்கு முறைமை பற்றி எல்லாம் மாவட்ட ரீதியாகமுஸ்லிம் தலைமைகள் தீர்மானங்களை எடுக்கும் நிலைகளில் உள்ளவர்கள் அறிவூட்டப்பட வேண்டும் எனும் நோக்கில் தேசிய ஷூறா சபை இது போன்ற பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.