Header Ads



ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும், பதவியிலிருந்து நீக்க முடியாது - சோபித தேரர்


-gtn-

ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும் பதவியிலிருந்து நீக்க முடியாது என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சித்த சுயாதீனமற்றுப்போனாலும் அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியல் சாசனத்தைப் போன்று உலகில் வேறு எங்கும் தாம் பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் சாசனத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு அதீதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாகத் வாக்குறுதி அளித்த போதிலும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்யக் கூடிய சிறந்த சந்தர்ப்பம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு காணப்பட்ட போதிலும் அவர் இதனை நிரந்தரமாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்டநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் பாதக விளைவுகளே அதிகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.