Header Ads



''இவ்வாறான சூழ்நிலையில் மாத்திரமே, பெண்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்''

தமது சேவைக்காலம் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக வெளிநாடுகளில் தங்கியிருக்க கூடிய பெண்கள் மாத்திரம் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பணிபுரியும் காலம் நிறைவடையும் முன்னர் இடைநடுவில் குறித்த பெண்களை தாயகத்திற்கு அழைத்துவருவது நெருக்கடியான விடயம் என அவர் குறிப்பிட்டார்.

எனவே, தொடர்ச்சியாக தங்கியிருந்து பணிபுரியும் தகுதி கொண்டவர்கள் மாத்திரம் மத்திய கிழக்கு பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

பெண்ணொருவர் தமது ஒப்பந்த காலத்தை நிறைவு செய்யும் வரை தொழில் புரிய வேண்டும். அந்த காலப்பகுதியில் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 2 வருடங்கள் பணிப் பெண் தொழில் ஈடுபடுவது தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் மாத்திரமே எதிர்காலத்தில் பணிப்பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

No comments

Powered by Blogger.