Header Ads



யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

(பாறுக் சிகான்)

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் கடந்த (17) வெள்ளியன்று பெரிய பள்ளிவாசல் ஜும்மா தொழுகையின் பின்னர் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் கீழ்க்கண்டவாறு துண்டுப்பிரசுரத்தில் உள்ளது....

யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்தை முக்கிய நோக்காகக் கொண்டு 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் பல இடையூறுகளுக்கு மத்தியில் செயற்பட்டு இன்று வரையும் தன்னலம் பாராது மக்கள் நலனுக்காகவே குரல் கொடுத்து வருகின்றது.

யுத்தகாலத்தில் யாழ் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் செயற்றிட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்திப் பணிகளும் மும்முறமாக இடம்பெற்று வருகின்றன. யாழ் நகர் பகுதி புதுப் பொழிவுடன் நவீனமயப்படுத்தப்பட்டு விட்டது. 1990ம் ஆண்டு முற்றுமுழுதாக நிர்மூலமயமாக்கப்பட்ட யாழ் கொழும்பு புகையிரத போக்குவரத்தும் புனர் நிர்மானம் செய்யப்பட்டு விட்டது. மொத்தத்தில் யாழ் மாவட்டமே புதுப் பொழிவுடன் ஜொலித்துக் கொண்டிருக்க யாழ் சோனகதெருப் பகுதி மட்டும் அபிவிருத்தி குன்றிய நிலையில் அசிங்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்குக் காரணம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டம் யாழ் வாழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இல்லை. அதனை பெற்றுக் கொள்வதற்குரிய நிபந்தனைகள் முஸ்லிம் மக்களுக்கு பாதகமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

வெற்றுக்காணியில் குடிசை அமைந்திருக்க வேண்டும். 
வெளி மாவட்டங்களில் விண்ணப்பதாரியின் பெயரில் வீடு இருக்க முடியாது.
இதற்கு முன் வீட்டு உதவி பெற்றிருக்கக் கூடாது. 

என்ற நிபந்தனைகள் 24 வருடங்களாக வெளி மாவட்டங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுள் 90 வீதமானமானவர்களுக்கு வெற்றி கொள்ள முடியாத நிபந்தனைகளாகவே அமையப்பெற்றிருக்கின்றன.
இவற்றினை அடிப்படையாகக் கொண்டு இந்திய வீட்டுத் திட்டத்திற்கு முயற்சிப்போமேயானால் மிகவும் சொற்ப எண்ணிக்கையான வீடுகளையே எமது சமூகம் பெற முடியும். இத்திட்டத்தினைக் கொண்டு முஸ்லிம்களின் 100மூ மீள் குடியேற்றத்தை பெற முடியாது என்பதே உண்மை.

இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பித்த 317 குடும்பங்களின் விபரங்களை சம்மேளனமே இந்திய வீட்டுத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்து அவர்கள் அனைவருக்கும் வீட்டுத்திட்டத்தினை பெற்றுக் கொடுக்க முன்னின்று செயற்பட்டு வருகின்றது. சொற்ப எண்ணிக்கையுடையவர்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் கிடைத்தாலும் மீதமானவர்களுக்கு வேறொரு திட்டத்தின் மூலமாவது வீட்டு உதவிகளை பெற்றுக் கொடுத்து முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை யாழ் மாவட்டத்தில் நிறுவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே கௌரவ அமைச்சர் றிஷhட் பதியுதீன் அவர்களை அவரது அமைச்சு அலுவலகத்தில் 2014.10.01ம் திகதி அன்று இரவு 8.00 மணியளவில் நேரடியாக சந்தித்து யாழ் முஸ்லிம்களின் தற்போதைய நிலை பற்றி எடுத்துரைக்கப்பட்டதுஇ முடிவில் 13.10.2014 அன்றுஇ தான் அதிமேதகு ஜனாதிபதியுடன் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும்இ அத்தினத்தில் இதற்கு ஒரு சிறந்த  தீர்வினை ஜனாதிபதியூடாக இந்திய வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் யாழ் மாவட்ட முஸ்லிம்களுக்கு பெற்றுத் தருவேன் எனவும் சம்மேளனத்திற்கு கௌரவ அமைச்சர் றிஷhட் பதியுதீன் அவர்களூடாக நிச்சயித்துக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல முறை தொலைபேசி மூலம்இ 13.10.2014 அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட இருக்கும் மகஜரை பற்றியும்இ சம்மேளனத்தின் எதிர்பார்ப்பு பற்றிய நினைவூட்டல்களும்இ கருத்துப்பரிமாற்றங்களும் அமைச்சருக்கும் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்றுக் கொண்டே இருந்தன.

13.10.2014 அன்று வீரசிங்க மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வடக்கு மாகாண அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டிய சம்மேளனம் சில நாசகார சக்திகளால் தடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அல்லாஹ் எங்களை கைவிடவில்லை. மக்கள் சம்மேளனத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்றியே ஆக வேண்டும் என்ற சம்மேளனத்தின் அயராத முயற்சியும்இ கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் மீது கொண்டிருந்த அக்கரையும் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கைகள் பற்றி சிங்கள மொழியில் ஜனாதிபதி முன்னிலையில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான் (அல்ஹம்துலில்லாஹ்). அவருடைய பேச்சுக்கு இசைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்களும் எழுப்பிய கேள்விகள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.

அமைச்சர் றிஷhட் பதியுதீன் அவர்களின் ஆதங்கத்தையும்இ 2009ம் ஆண்டு மாநகரசபையை தற்போதைய அரசு ஆட்சி செய்ய காரணமாக இருந்ததுஇ அமைச்சர் றிஷhட் பதியுதீன் அவர்களின் கட்சி (யுஊஆஊ) ஊடாக கிடைக்கப்பெற்ற 4 மாநகர சபை உறுப்பினர்கள் என்பதையும்  உணர்த்த ஜனாதிபதி அவர்கள் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம்இ வீட்டுத்திட்டம் தொடர்பில் உள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்கு அமைச்சர்களான றிஷhட் பதியுதீன்இ டக்ளஸ் தேவானந்தாஇ வடமாகான ஆளுநர் பு.யு சந்திரசிறீஇ யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரைக் கொண்ட விசேட குழு ஒன்றை தனது முன்னிலையில் நியமித்தார்.  
         
இது எதிர்கால யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக சம்மேளனம் மேற்கொண்ட தியாகத்திற்கும் முயற்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு சம்மேளனத்தின் 72 பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள் என்பதனை தெரிவித்துக்கொள்வதோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட குழுவிற்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தேவைப்படும் தரவுகளுக்கும் பதிவு நடவடிக்கைகளுக்கும் துமுஆகு என்றும் உறுதுணையாக இருக்கும். 

என அதில் குறிப்பிட்டுள்ளது.இதே வேளை அங்குள்ள பிரதேச அரசியல்வாதி ஒருவரும் ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியொன்றை பிரதி எடுத்து துண்டுப்பிரசுரமாக மக்களிடம் விநியோகித்திருந்தார்.

மேற்குறித்த இரு துண்டுப்பிரசுரங்களும் யாழ் முஸ்லீம்களின் அடிப்படை பிரச்சினைகளாக காணிஇவீடு சம்பந்தமாக யாழில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற வட மாகாண விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற தீர்வினை அடிப்படையாக வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.