Header Ads



கொழும்பில் பொதுபல சேனா மாநாடு - வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறை

கொழும்பில் நாளை பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 27-09-2014 இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள் இதனை அவதானிக்க முடிகின்றது.

இதனை தற்செயலாக நடைபெறுவதாக நினைத்தால் இது எமது மடமை. இந்த நாட்டினை பௌத்த சிங்கள நாடு என உணர்த்தும் தேவை அரசுக்கு இன்று  ஏற்பட்டிருகின்றது.

இலங்கை அரசுக்கு பல்வேறு கோணங்களின் வெளிநாட்டு அழுத்தங்கள் கூடுதாலாக இடருந்து கொண்டு இருகின்றது. இதனை தவிர உள்நாட்டிலும் வித்தியாசமான அழுத்தங்கள் அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

யுத்த வெற்றியினை வைத்துக் கொண்டு இந்த நாட்டினை இருபத்தைந்து வருடங்களுக்கு ஆட்சி நடாத்துவோம் என்று கூறிவந்த ஜனாதிபதிக்கு இன்று ஐந்து வருடங்களுக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

இதனால்தான் இவர்கள் தேவையற்ற பிரச்சினையை தூண்டி விடுகின்றனர். இந்த நாட்டில் ஏனையவர்களுக்கு இருக்கக் கூடிய உரிமையைத்தான் நாங்கள் கேட்கின்றோம்.

இந்தநாட்டின் உரிமைக்கு நாங்கள் உரித்துடையவர்கள். ஒரு நாட்டுக்குள் நாங்கள் இறைமையின்றி இருக்கக் கூடாது. எமது உரிமைக்கு ஏற்றபடி அரசியல் யாப்பு முறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நடந்தால் தங்களது ஆதிக்கம் இல்லாம் போய்விடும். என்பதற்காவே பேரினவாதத்தினை தூண்டி விடுகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

1 comment:

  1. எந்த கட்சியாகவோ, சுயேட்சையாகவோ இருந்தாலும் பரவாயில்லை.. நாடு நலம் பெற வேண்டுமெனில் நல்லவர்களையே தேர்ந்தெடுங்கள்.... மக்களிடம் மாற்றம் இருந்தால்தான் ஜனநாயகம் மலரும்....இல்லையெனில் இதுபோல் அவலநிலைதான் தொடரும்

    ReplyDelete

Powered by Blogger.