Header Ads



லிபியாவின் முஸ்லிம் போராளிகள் மீது UAE விமான தாக்குதல் - எகிப்தும் உதவியது

லிபியாவில் இஸ்லாமிய போராளிக ளுக்கு எதிராக நடத்தப்பட்ட மர்ம மான வான் தாக்குதல்களின் பின்ன ணியில் ஐக்கிய அரபு இராச்சியம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். எகிப்து விமான த்தளத்தை பயன்படுத்தியே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த குண்டு தாக்குதல்களுக்கு அமெரிக்கா எந்த உதவிகளையும் வழங்கவில்லை என்று இரு அமெரிக்க அதிகாரிகள் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப் பிட்டுள்ளனர்.

இதில் முதல் வான் தாக்குதல் தலைநகர் திரிபோலியில் இருக்கும் போராளிகள் இலக்குகள் மீது ஒரு வாரத்திற்கு முன் நடத்தப்பட்டது.

இரண்டாவது சுற்று தாக்குதல்கள் தெற்கு நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இஸ்லாமிய போராளிகள் திரிபோலி சர்வதேச விமானநிலையத்தை கைப் பற்றுவதை தடுக்கவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும் போது விமானநிலையம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. லிபிய தாக்குதலுக்கு ஐக்கிய அரபு இராச் சியம் யுத்த விமானங்கள், விமானப் படையினர் மற்றும் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை பயன்படுத்தியிருப்பதோடு எகிப்து தனது விமானத்தளத்தை பயன்படுத்த அன மதித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் அரபு சர்வாதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய வாத அமைப்புகளுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடாகவே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர்.

No comments

Powered by Blogger.