Header Ads



முஸ்லிம் அரசியல், இன்று ஒரு திரை அரங்கினுள் சிறைப்பட்டுள்ளது - பசீர் சேகுதாவூத்

(JM.HAFEEZ)

திறந்த பொருளாதாரம், பூலோக மயமாதல், பெற்றோலுக்கான டொலர்கள் என்பனவே இன்று உருவாக்கப்பட்டுள்ள  இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற கற்பனாவாதத்திற்கான காரணமாகும் என்று  உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.(23.8.2014)

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 19 வது வருடாந்த மகா நாட்டில் விசேட பேச்சாளராகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய நூதன சாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

சமகால அரிசியலும் முஸ்லீம்கள எதிர் கொள்ளும சவால்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இந்நாட்டில் வாழ்கின்ற 230 இலட்சம் மக்களுக்கு உரையாற்றுவதும் ஒரு ஊடகவியலாளர் மகா நாட்டில் உரையாற்றுவதும் சமமானதாகும் என்றார். முன்பு முஸ்லீம்களின் அரசியில் பிரதி நிதித்துவத்தை அல்லது வாக்கு வங்கியை வைத்துத்தான் அரசியல் நிலைமை தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை மாற்றமடைந்துள்ளது.

இன்று முஸ்லிம் அரசியல் ஒரு திரை அரங்கினுள் சிறைப்பட்டுள்ளது. அங்கு வில்லனாக முஸ்லீம்களும் ரசிகர்களாக பெரும்பான்மை மக்களும் சித்தரிக்கப்படுகின்றனர். மூன்று இனக் குழுக்கள் வாழும் ஒரு நாட்டில்; இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்படும் போது மூன்றாம் தரப்பை தம்பக்கம் இழுக்கும் ஒரு உபாயம் காணப்படுகிறது.இலங்கையில் சிங்கள தமிழ் மோதலில் முஸ்லீம்களை தம் பக்கம் இழுப்பதில் சிங்களவர்கள் வெற்றி பெற்றனர்.

அவ்வாறு தம்பக்கம் இழுக்கப்பட்ட முஸ்லீம் சமூகம் என்ற ஆயுதம் யுத்தம் முடிவடைந்த பின் அவசியமற்ற ஒரு பொருளாகி விட்டது. அதுவே இன்று முஸ்லீம்களுக் கெதிரான அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இது ஒரு முக்கிய சவாலாகும். ஐம்பது அருபது வருடங்களுக்கு முன் இஸ்லாம் என்றால் அது ஒரு ஆண்மீக ரீதியானது என்ற கருத்து நிலவியது. ஆனால் இன்று இஸ்லாம் என்றால் அரசியல் விழிப்பிற்கான ஒரு விடயம் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சவாலாகும்.

அடுத்ததாக இலங்கை முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லீம்களாக வாழவும் வேண்டும். அதே நேரம் இலங்கையர்களாகவும் வாழவும் வேண்டும்.  ஆனால் பேரினவாதிகள் எதிர் பார்ப்பது நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழ்ந்தால் போதும் என்பதே. காரணம் அவர்கள் பௌத்தர்களாக வாழ்ந்தாலும் போதும். அல்லது இலங்கையர்களாக வாழ்ந்தாலும் போதும் என்ற ஒரு எதிர்hபார்பபாகும். ஆனால் நாம் முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழும் போது அது இலங்கையர் என்ற அடையாளம் அல்ல என்பதே அவாகள் வாதமாக இருக்கலாம். இதுவும் ஒரு சவாலாகும்.

உலகலாவிய ரீதியில் முஸ்லீம்கள் அழிக்கப்பட்டும் ஆக்கரமிக்கப்பட்டும் வரும் வேளையிலே சர்வதேச ரீதியில் முஸ்லீம்களிடையே ஸலீம்களுக்கான ஒரு அனுதாபம் ஏற்பட்டு வருகிறது. இதன் தாக்கமும் எம்மில் உண்டு. இதுவும் ஒரு சவாலாக உள்ளது.

இவை அனைத்தும் ஒரு பரந்த கலந்துரையாடலுக்கு இட்டுச் செல்லப்பட வேண்டுமு;. மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் காலத்தில் அவ்வாறான கலந்துரையாடல் மூலம் சில கருமங்கள் முன் எடுக்கப்பட்டன. அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்பட்டு நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

உலகமயமாதல். திறந்த பொருளாதாரம், பெற்றோலுக்கான டொலர் இவைதாக் இன்று இஸ்லாத்தின் பேரால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதமே ஒழிய இஸ்லாமிய பயங்கரவாதம் ஒன்று இல்லை. எல்லா மதத்திலும் மதவாதம் உண்டு. அது போல் இஸ்லாத்திலும் இஸ்லாமிய மதவாதம் இருக்கலாம். அனால் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒன்று கிடையாது. அது உருவாக்கப்பட்ட ஒரு கற்பனாவாதமாகும்.

ஓல்லாந்தர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இலங்கை முஸ்லீம்களது சக்தி இலங்கையைப் பாதுகாக்கவே பயன்பட்டு வந்தது. இன்று ஊடகம் என்பது சமூக வளைத்தலங்களின் பிரவேசம் காரணமாக அது ஒரு விற்பனைப் பண்டமாகி விட்டது. இதன் காரணமாக செய்திக்கான தர்மம் இன்று குறைந்து விட்டது. இன்னிலையில் உண்மைகள் சரியாக வெளி வருவதில்லை.

இன்று உலக அளவில் தார்மீக மதம், ஏப்ரஹாம் மதம் என்ற இரு பிரிவாகப் போய்கொண்டுள்ள நிலையையும் காணலாம். இதுவும் மத முரண்பாடுகளுக்குக் காரணமாகிறது.

 அரசியல் வாதிகள் வாக்களை எடுக்கும் ஏ.டி.எம். யந்திரங்கள் என்ற நிலையும் வாக்காளர்கள் வாக்கு வங்கிகள் என்ற நிலையும் இருக்கும் வரையும் உருப்படியாக எதுவும் நடக்காது. வுhக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்லாது பொது நலத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலவ் உருவாக்கப்பட் வேண்;டும் என்றார்.

2 comments:

  1. பைத்திய கார கொஸ்பிடலில் இருக்கும் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு பைத்தியம் வந்தா... போன்ற ஒரு கதை ஒன்றை அளந்துள்ளார் இந்த கிறுக்கு... இவர் பேசுவதில் இருந்தே தெரிகிறது இந்த மகா நாட்டின் கணம்.

    ஆங்கிலேயருக்கு பிறகு வாழ்ந்த முஸ்லிம்களின் சக்தி , என்ன இலங்கையை பிரிக்கவா பயன்படுத்தப் பட்டது. BBS கும் இவருக்கும் ஒரு வித்தியாசமும் புரியல.

    உம்மை விட பத்திரிக்கை நடத்துபவர்கள் மிகவும் தர்மமாகவே உள்ளனர்.
    ராஜபக்ச அன் கோ வினால் தான் முஸ்லிம்களுக்கு இவ்வளவு சீரழிவு என்பது ஒரு பாமர மகனுக்கும் விளங்கும் விடயம் புரிந்தும் புரியாதது மாதிரி கதை விடுகிறார் இந்த மேதாவி...???

    ReplyDelete
  2. 1915 கலவரம்.... அநாகரிக தர்மபாலாவின் சரித்திரத்தையும் கொஞ்சம் படித்துப்பாரும் முஸ்லிம்களின் நெருக்கடிக்கான சரித்திரம் புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.