Header Ads



ஐ.தே.க. + நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - ஊவா தேர்தல் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஊவா மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) வெள்ளிக்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

ஐ.த.கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக அவர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் MR.நாஜா முகம்மத் அவர்களும் கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் ஐ.தே. கட்சி சார்பாக அதன் தலைமைத்துவ சபை தலைவர் கௌ.பா.உ கரு ஜெயசூரிய, தவிசாளர் கௌ.பா.உ. கபீர் ஹாசீம், ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கௌ.பா.உ. திஸ்ஸ அத்தனாயக, தேசிய அமைப்பாளர் தயா கமகே, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நாஜா முஹம்மத் (இஸ்லாஹி), தேசிய அமைபாளர் அஷ்ஷெய்க் MBM.பிதௌஸ் (நளீமி), வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், (நளீமி) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமத்துவ சபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் SH.பிர்தௌஸ் ஆசிரியர், அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி), மற்றும் ந.தே.முன்னணியின் தலைமத்துவ சபை உறுப்பினர்களான MACM.ஜவாகிர் ஆசிரியர், அஷ்ஷெய்க் ரிஸ்வி (காசிமி), பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரதான கூறுகள்

இலங்கை, ஒரு பல்லின பல மதங்களைக் கொண்ட நாடு என்ற வகையில் சமூகங்களுக்கிடையே ஐக்கியம், ஒருமைப்பாடு, பரஸ்பரம், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல், சக வாழ்வு போன்ற அம்சங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பிரதான கூறுகளாகக் காணப்படுகின்றன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தினைக் கருத்திற்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இப்புரிந்துணர்வு உடன் படிக்கையினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

01 சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, நல்லாட்சி போன்ற அம்சங்களை நிலை நிறுத்துவதன் ஊடாக சமூகங்களுக்கிடையே சக வாழ்வையும், மீள் இணக்கத்தையும் ஏற்படுத்தி அவற்றை நிலைத்திருக்கச் செய்வதற்கும்.

02  அர்த்தமுள்ள சக வாழ்வையும், நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும், இனநல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும்.

03 மக்களினதும், நாட்டினதும் பொருளாதார அபிவிருத்திகளையும், அர்த்தமுள்ள நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியையும் மேற்கொள்ளக்கூடிய சாதகமான சூழ்நிலைகளை தோற்றுவிப்பதற்கு, அதிகாரத் துஷ்பிரயோகத்தையும், பொது நிதியையும், சொத்துக்களையும் பிழையாகப் பயன்படுத்துவதையும், ஊழலையும் இல்லாதொழிக்கத் தேவையான தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அமுல்படுத்துவதற்கும் இவ் உடன்படிக்கை எட்டப்படுகிறது.

04  மேற் சொன்ன இலக்குகளை நீண்ட காலத்தில் அடையும் நோக்கில் முதற் கட்டமாக எதிர் வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இரு தரப்பும் இணைந்து செயலாற்றுவதற்கு பற்றுறுதி கொள்கின்றன.

05         மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாண சபை நிர்வாகத்தை கைப்பற்றும் சூழ்நிலை ஏற்படுமிடத்து

Ø  பொதுவாக முழு நாட்டுக்கும் குறிப்பாக ஊவா மாகாண மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் நல்லாட்சிக் கூறுகளை வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப் படுத்துதல்

Ø  ஊவா மாகாணத்தின் சுகாதார சேவைகள் சமூக கலாசார மற்றும் கல்வி மேம் பாட்டுக்கான வினைத்திறன் மிக்க பொருளாதாரத் திட்டமொன்றை அமுல்படுத்துதல்

06 ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாண சபையை அமைக்கும் பட்சத்தில் தேர்தல் ஊடாகவே, அல்லது நியமனம் மூலமோ முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஒன்றை உத்தரவாதப்படுத்துதல்.

07   எதிர் காலத்திலும் தேசிய மட்டத்திலான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை தொடர்ந்தும் இரு தரப்பும் ஆராயும்.

1 comment:

  1. Uva prauncul council oru muslim membership waramal saiyun welathan ithu slmc yum a l n congresum uva vil onraha potti idum pothu antha waakkukakai kalaththu onrum illamal saiyum sathithan intha.oppabthan uva muslimkal kawanamaha irukka wendum.

    ReplyDelete

Powered by Blogger.