Header Ads



கஸ்ஸாம் தளபதிக்கு, தனது மகளை கொடுத்த தந்தையின் வீரமிகு வார்த்தைகள்..!

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அயுதப் பிரிவு தளபதி மொஹமத் தைப்பின் மனைவி மற்றும் சிறு குழந்தையான மகனின் இறுதிக்கிரியையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்ததோடு இஸ்ரேல் மீது பழி தீர்க்கவும் ஆத்தரத்தோடு கோஷமெழுப்பினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொல்லப்பட்ட 27 வயதான மனைவி விதாத் மற்றும் ஏழு மாத மகன் அலி ஆகியோரது உடல்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை அவர்களது குடும்ப வீட்டில் இருந்து ஜபலியா அகதிமுகாமில் இருக்கும் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு தொழுகை நடத்தப்பட்ட பின் நல்லடக்கம் வெய்யப்பட்டன. மொஹமத் தைப்பை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயர் தப்பியபோதும் நால்வர் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கிரியையின்போது குழந்தை அலியின் உடல் தாயின் உடலுக்கு மேலால் வைத்திருந்ததோடு பலரும் அதற்கு முத்தமிட்டனர். ஹமாஸின் பச்சைக் கொடிகளை அசைத்தவாறு நூற்றுக்கணக்கானவர்கள் இருவரது உடலையும் அடக்கஸ்தலத்தை நோக்கி கொண்டுசென்றபோது, "பழிவாங்கப்படும், பழிவாங்கப்படும்" என்று கோஷமெழுப்பினர்.

"இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியிடம் இந்த கொலைகள், படுகொலைகளுக்கு பழிவாங்கும்படி கோருகிறோம்" என்று இறுதிக்கிரி யையில் பங்கேற்க வந்த 18 வயதான முஹமத் என்ற இளைஞன் குறிப்பிட்டான். அல் கஸ்ஸாம் படையணி ஹமாஸ் ஆயுதப்பிரிவாகும்.

கவலையுடன் காணப்பட்ட விதாத்தின் தந்தை முஸ்தபா ஹார்ப் தனது சிறிய பேரனின் உடலை கையில் ஏந்தியவாறு பள்ளிவாசலில் இருந்து அடக்கஸ்தலத்தை நோக்கி கோண்டுவந்தார். வெள்ளைநிற புடவையால் மறைக்கப்பட்ட குழந்தையின் உடலின் முகம் மாத்திரம் தென்படும்படி வைக்கப்பட்டிருந்தது. குழந்தையின் வெண்ணிற முகத்தின் கண்களை யொட்டி காயம் ஏற்பட்டிருந்தது.

"காசாவில் இருக்கும் ஏனையவர்களின் நிலையில்தான் நானும் இருக்கிறேன். தமது குழந்தைகளை இழந்த ஏனையவர்களில் இருந்து நான் வேறுபட்டவனல்ல. இது ஒரு சுனாமி போன்று இருக்கிறது" என்று 56 வயதான ஹார்ப் கோபத்துடன் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற அவரது மகள் ஏழு ஆண்டுகளுக்கு முன் தைப்பை திருமணம் முடித்தபோது, தந்தை என்ற வகையில் அது ஒரு மரண தண்டனையாகவே உணர்ந்திருக்கிறார். "மொஹமத் தைப்பை திருமணம் முடிக்க தீர்மானித்தபோதே தாம் ஒரு உயிர்த்தியாகியாக மரணமடைய வேண்டும் என்பதை எனது மகள் தெரிந்தே வைத்திருந்தாள். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தருணமும் அவளது இறப்புப் பற்றி நான் எதிர்பார்த்தே இருந்தேன்" என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் தனது மருமகனான தைப்பை திருமணத்தின்போது மாத்திரமே கண்டதாகவும் ஹார்ப் குறிப்பிட்டார். திருமணத்திற்கு பின்னர் அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்பது தனக்கு தெரியாமலேயே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தைப் மற்றும் விதாத் தம்பதிக்கு இரு மகள்கள் மற்றும்; ஒரு மகன் இருந்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலின்போது இரு மகள்களும் எங்கிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுவன் மற்றும் 48 வயது பெண்ணின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.