Header Ads



பலஸ்தீனத்திற்கு ஜனாதிபதி மஹிந்த, நிதி வழங்கியதை விமர்சிக்கிறது ஐ,தே.க.

பலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இன்னொரு நாட்டுக்கு பொதுமக்களின் பணத்தை வழங்கும் போது அங்கீகாரம் போன்ற நடைமுறைகள் அவசியம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இலங்கை நாட்டின் தலைமைக்கு அவ்வாறு கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதி முன்னரும் இவ்வாறான நிதியளிப்புகளை மேற்கொண்டுள்ளார். உகண்டாவின் தொழில் பயிற்சி நிலையத்துக்கு நிதியுதவிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு செல்லும் வீதிக்கு காபட் போடுவதற்கு 50 மில்லியன் ரூபாய்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த வீதிக்கு மஹிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கை பாரிய கடன்சுமையில் உள்ளபோது ஏனைய நாடுகளுக்கு உதவியளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. தற்போது இலங்கையர் ஒருவருக்கு 350, 000 ரூபா கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டார் ஒப் பலஸ்தீன் என்ற விருது கிடைத்தமைக்காகவே ஜனாதிபதி அந்த நாட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.