Header Ads



''தாமரை தடாகம், 70 இலட்சம்'' இன்றும் இறுதி தீர்மானங்கள் எதுவுமில்லை - ஜம்மியத்துல் உலமா

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தாமரை தடாகத்தில் ஒரு சமாதான மாநாட்டை நடத்தவிருப்பதாகவும் அதற்கு 70 இலட்சம் ரூபா செலவிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து எத்தகைய இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜம்மியத்துல் உலமாவின் ஒரு சமாதான மாநாட்டை நடாத்தவுள்ளது. இன நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டும், ஒரு சமாதான பிரகடனத்தை வெளியிடும் நல்ல நோக்கிலேயே இந்த மாநாட்டை நடாத்தவுள்ளது. இதில் பலர் கலந்துகொள்வார்கள்.

கடந்த ஜம்மியத்துல் உலமாவின் நிறைவேற்றுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டது. இந்த மாநாட்டிற்குரிய இடம், அதற்கான வசதிகள் பற்றியும் பேசினோம். பலரும் பல இடங்களை பிரேரித்தனர். எனினும் தாமரை தடாகத்தில்தான் இந்த மாநாட்டை நடத்த வேண்டும், அல்லது அதற்காக 70 இலட்சம் ரூபாய்களை செலவிட வேண்டும் என்பன பற்றியெல்லாம் நாம் எத்தகைய இறுதித் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

ஜம்மியத்துல் உலமா சபையானது இஸ்லாமிய அடிப்படையில், நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, இலங்கை முஸ்லிம்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் எனவும் அவர் மேலும் கூறினார்.

5 comments:

  1. 70 lakhs spend and we need this program. We can spend this money for poor people

    ReplyDelete
  2. மேற்படி விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது என்பதை இவர் ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியாயின், கூட்டத்தில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கிளாஸ் உடைப்பும், சண்டையும் உண்மைதானோ?

    ReplyDelete
  3. கொழும்பில் கோடி கோடியாக சொத்து சேர்த்துள்ள உலமா சபை என்கின்ற துரோகிகள் சபையின் தலைவர்கள் குறித்தே இதுவரை கண் திறக்காதஉள்ளதை எல்லாம் இழக்கும் சமூகம்இனியாவது கண் திறக்குமா இந்த சமூகம்.தற்போது இந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் முனாபிக் தனத்தை மக்கள் படிப்படியாக உணர்ந்து வருகின்றனர் எனவே தாருந் நத்வாவுக்கு ஏற்பட்ட அவ்வாறானதொரு இழிவு நிலை இந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை அதற்க்கு முன்னர் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொண்டாலே தவிர..இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. அல்லாஹ் உண்மையை வெளிப்படுத்திவிட்டான்ம்மியதுல் உலமா சபை என்பது முஸ்லிம்களை நேர்வழி செலுத்துவதற்காக எமது முன்னோர்களால் உருவாக்கப் பட்ட ஒரு ஸ்தாபனம். இதன் கடமை கள்இன்று ஜம்மியதுல் உலமா சபையால் சரியாக நிறைவேற்றப் படுகிறதா?என்ற தவிர்க்க முடியாத கேள்வி யொன்று முஸ்லிம்கள் மத்தியில் புதாகரமாக எழும்பிக் கொண்டிருப்பதை காணலாம்.இலங்கை முஸ்லிம்களின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக செயல்பட வேண்டிய ஜ.உ.சபை யாருக்கோ அஞ்ஞிக் கொண்டு யாறுடைய தேவைக்காகவோ இயங்கும் ஓர் இயக்கமாக மாறிக் கொண்டிருப்பதாக அவதானிக்க முடிகிறது.
    July 22 at 1:31am · Like

    ReplyDelete
  5. OH....REALLY...........how did this ULMA SABAI get this huge money ? are they becoming NGO or Ulama sabai for our sri lankan musims ?...... ALLAAH only can save sri lankan muslims from this sabai .......

    ReplyDelete

Powered by Blogger.