Header Ads



முஸ்லிம் நாடுகள் சிங்களவரை திருப்பி அனுப்ப தீர்மானித்தால்..!

நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குஅளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1970ம் ஆண்டு காலப்பகுதியை விடவும் தற்போது இனவாதம் அதிகளவில் தலைதூக்கியுள்ளது.

துட்டகெமுனு மன்னன் எல்லாள மன்னனுடன் போர் புரிந்தது இனவாதம் காரணமாக அல்ல. இதன் காரணமாகவே துட்டகெமுனு மன்னன், எல்லாள மன்னரின் அஸ்தியை வைத்து விஹாரை ஒன்றை அமைத்து மக்களின் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தார்.

அன்றை விடவும் முன்னேற்றமடைந்த இன்றைய சமூகத்தில் இனவாதம் தலைதூக்குவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. 83ம் ஆண்டில் அரசாங்கம் எடுத்த இரண்டு பிழையான தீர்மானங்கள் 30 ஆண்டு கால போருக்கு வழியமைத்தது.

வடக்கில் கொல்லப்பட்ட 13 படையினரின் சடலங்களையும் கொழும்புக்கு கொண்டு வந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டன. இவ்வாறான ஓர் தருணத்தில் சிங்கள மக்களின் மனோ நிலையை நான் சொல்லத்தேவையில்லை.

அண்மையில் நடைபெற்ற சம்பவங்களைப் பாருங்கள். சிலர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த 14 லட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் கடமையாற்ற வருகின்றனர். முஸ்லிம் நாடுகள் இவர்களை திருப்பி அனுப்ப தீர்மானித்தால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் யாருக்கும் புரிவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்


No comments

Powered by Blogger.