Header Ads



ஈராக்கில் கைதிகள் சென்ற வாகனம் மீது தாக்குதல்: 60 பேர் பலி

ஈராக்கில் அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட ஷியா பிரிவு அரசை எதிர்த்து சன்னி பிரிவு போராளிகள் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றியுள்ள பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசம் ஒன்றை அறிவித்துள்ள இந்த ஜிஹாதிப் போராளிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இன்று 24-07-2014 தலைநகர் பாக்தாதில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள டஜி பகுதியில் உள்ள ராணுவதளங்களின் மீது போராளிகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இங்கு பயங்கரவாதக் குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதனால் சிறைச்சாலைகள் உடைக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தக் கைதிகளை ஒரு காவல் வாகனத்தில் ஏற்றி வேறு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல அதிகாரிகள் முயன்றனர்.

கைதிகள் ஏற்றிய வாகனம் தொலைதூரப் பகுதி ஒன்றின்வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து துப்பாக்கித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் 52 கைதிகளும், எட்டு வீரர்களும் பலியானதாகவும் மேலும் ஏழு கைதிகளும், எட்டு வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.