Header Ads



52 இஸ்ரேல் படையினர் கொலை, 36 கவச வாகனங்கள் அழிப்பு - அல் கஸ்ஸாம் படையின் வீரம்


காசாவின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக 16 ஆவது நாளாகவும் நேற்று புதன் கிழமையும் தாக்குதல்களை தொடர் ந்தது. இதில் காசாவில் இருக்கு ஒரே மின்சார உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யது. மறுபுறத்தில் மோதலை முடி வுக்கு கொண்டுவர தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 

பலஸ்தீன அவசர சேவை வெளியிட்ட அறிவிப்பில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதல் களில் 24 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காசா மீது நிலம், வான் மற்றும் கடற் பகுதிகளால் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. கான் யு+னிஸ் பகுதியில் இடம்பெற்ற சரமாரி தாக்குதல்களில்; 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பெரும்பாலானோரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவசர சேவை பிரிவு குறிப்பிட்டுள் ளது. இதற்கமைய இரண்டு வாரங்க ளுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லட்ட பலஸ்தீனர் களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது. இதில் 161 சிறுவர்கள், 66 பெண்கள் மற்றும் 35 வயது முதிர்ந்தவர்கள் அடங்குகின்றனர். இதுவரை 4000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

மறுபுறத்தில் பலஸ்தீன போராளிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இதில் 29 இராணுவத்தினரும் இரண்டு சிவிலியன்களும் அடங்குகின்றனர். எனினும் தமது தாக்குதல்களில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இதுவரை 52 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி கடந்த செவ்வாய்க் கிழமை மாலை அறிவித்தது. தமது படையணியின் தாக்குதல்களில் இஸ்ரேலின் 36 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேல் வீரர் ஒருவர் தம்மிடம் பிடிபட்டிருப்பதாகவும் ஹமாஸ் அறி வித்திருந்தது. தமது வீரர் ஒருவர் காணாமல்போனதை இஸ்ரேல் இரா ணுவம் உறுதிசெய்தபோதும் அந்த வீரர் இறந்திருக்கக் கூடும் என்று அது குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் முற்றுகையில் இருக்கும் காசாவின் மக்கள் தொகை யில் அரைப்பங்கினருக்கு மின்சாரம் விநியோகிக்கும் அங்குள்ள ஒரே மின்சார உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் நேற்று  தாக்குதல் நடத்தியது. மின்சார நிலையத்தின் பிரதான கருவிகள் சேதமடைந்திருப்பதாக மின்சார நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் காசாவில் தற்போது 10 வீதத்தினருக்கு மாத்திரமே மின்சார வசதி இருப்பதாக குறிப்பிட்டார். 

இஸ்ரேலில் இருந்து வழங்கப்படும் மின்சார விநியோகம் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது. காசாவில் இருந்து வந்த ரொக்கெட் தாக்கியதில் மின்சாரம் விநியோகிக்க முடியாதிருப்பதாக இஸ்ரேல் காரணம் கூறியது. மறுபுறத்தில் காசாவில் ஐ.நா. வினால் நடத்தப்படும் பாடசாலைகளில் தற்போது இடம்பெயர்ந்த பலஸ்தீன அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறான பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் இரண்டு தினங்களுக்குள் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியதாக ஐ.நா.வின் நிவாரண உதவிகளுகாக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

"மத்திய காசாவில் இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. நிவாரண அமைப்பு தனது கடுமையான வார்த்தைகளை கொண்டு கண்டனத்தை தெரிவிக் கிறது" என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல்கள் காரண மாக 135,000க்கும் அதிகமான காசா மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி அங்கிருக்கும் 69 ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள னர். பலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா நேற்று குறிப்பிடும்போது, மீட்பாளர் கள் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டி களின் செயற்பாட்டுக்கு இஸ்ரேல் படையினர் இடையு+று செய்வதால் காசாவின் ஒருசில பகுதிகளிலிருந்து சடலங்களை அப்புறப்புடுத்துவது மற்றும் காயமடைந்தோரை கொண் டுவருவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார். 

அத்துடன் மருத்துவமனை களில் மருந்து தட்டுப்பாடும் அதி கரித்திருப்பதாக அவர் எச்சரித்துள் ளார். இதேவேளை மேற்குக்கரை நகரான பெத்லஹாமிலும் இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள் ளார். 32 வயதான மஹ்மூத் அல் ஹமாம்ரா என்பவர் வாகனத்தில் செல்லும்போது சுடப்பட்டதாக சம்ப வத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள் ளனர். இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 

ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலத் தில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை இரவும் இஸ்ரேல் இராணு வத்தினருக்கு எதிராக பலஸ்தீனர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஏழு பலஸ்தீனர்களை இஸ்ரேல் படையினர் கைது செய்த னர். பென் குரியொனில் இருக்கும் இஸ்ரேலின் பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காசாவில் இருந்து ஏவப்பட்ட ரொக் கெட் விழுந்ததால் இரு இஸ்ரேலியர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல விமான சேவைகளும் இஸ்ரேலுக்கான விமா னப்பயணத்தை நேற்று இரத்துச் செய்திருந்தது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் வைத்து திரும் பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க இரா ஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி ஆகியோர் மோதலை முடிவுக்கு கொண்டுவர பிராந்தியத்தில் தங்கி நின்று தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். உடனடியாக தாக்கு தல்களை நிறுத்தும்படி இருவரும் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் எகிப்து முன்வைத்த யுத்த நிறுத்தத்தை நிராகரித்ததற்கு ஹமாஸ் பொறுப்புக் கூற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டார். காசாவை ஆளும் ஹமாஸ் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த காசாவில் நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருமாறு நிபந் தனை வித்தித்துள்ளது. 

பலஸ்தீனில் அண்மையில் ஏற் படுத்தப்பட்ட ஐக்கிய அரசின் பிர தமர் ரமி ஹம்தல்லாஹ், பலஸ்தீனர் களின் இடைவிடாத துன்பத்திற்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டதாக குறிப்பிட்டார். "கடந்த 47 ஆண்டுகால இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் நாளாந்தம் துன் பத்தை அனுபவித்து வரும் எமது மக்களுக்காக நாம் நியாயத்தை கோருகிறோம். இந்த ஆக்கிரமிப்பும் முற்றுகையும் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது" என்று ஹம்தல் லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன பத்தாஹ் அமைப்பின் இணை நிறுவனரும் பலஸ்தீன நிர் வாகத்தின் ஜனாதிபதியுமான மஹ் மூத் அப்பாஸ{ம் ஹமாஸின் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைக்கு ஆதரவளித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் 'லிட் ஹமாஸினால் கடத்தப்பட்ட தைத் தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் தடைகளை விதிக்க ஆரம்பித்தது. பின்னர் பலஸ்தீன பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஹமாஸ் 2007 ஆம் ஆண்டு காசா வில் இருந்து பத்தாஹ் அமைப்பை வெளிவேற்றியதை அடுத்து அந்த பகுதியை இஸ்ரேல் மற்றும் எகிப்து முழுமையாக முடக்கியது. 

எனினும் ஹமாஸ் மற்றும் பத்தாஹ்வுக்கு இடையில் கடந்த ஏப்ரலில் நல்லிணக்க உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதோடு இதனைத் தொடர்ந்து பலஸ்தீனில் ஐக்கிய அரசொன்று அமைக்கப்பட்டது இந்த நடவடிக்கை இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதேவேளை காசா பதற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் அவசர கூட்டம் நேற்று nஜனீவாவில் இடம்பெற்றது. இதில் இஸ்ரேல் படையின் காசா மீதான தாக்குதல் யுத்த குற்றமாகும் என்று மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை விமர்சித்தார். "சர்வதேச சட்டங்கள் மோசமாக மீறப்பட்டு பாரிய யுத்த குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன" என்று இந்த அவசர கூட்டத்தில் பிள்ளை குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலை ஒரு பக்கச் சார்பான அமைப்பு என்று குற்றம் சாட்டும் இஸ்ரேல் அது முன்னெடுக்கும் எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008-2009 காசா மோதலின் போது இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் யுத்த குற்றத்தில் ஈடுபட்ட தாக ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் 2009 அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் இந்த அறிக்கையை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிராகரித்தது.

No comments

Powered by Blogger.