Header Ads



வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு..!

(ஜுனைட் நளீமி)

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைச்சம்பவங்கள் குறித்து ஆராயும் நிகழ்வொன்றினை பிரித்தானிய வாழ்  இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளமையினை ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது. 

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பௌத்த தேசிய அடிப்படைவாத இயக்கங்களின் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உள்நாட்டில் பல்வேறு அரசியல் தரப்புக்களாலும்  கைவிடப்பட்ட சமூகமான முஸ்லிம்களது பிரச்சினைகள்  குறித்த தீர்வுப்பொறிமுறையின் அவசியம் குறித்து சமூகத்தளத்தில் பேசப்படுகின்றது. உள்ளூரில் முஸ்லிம்களது எதிர்காலம் குறித்த சவால்களுக்கான சட்டவொழுங்கு ரீதியான பொறிமுறைகள் குறித்து நம்பிக்கையீனம் நிலவுகின்ற நிலையில் புலம்பெயர் முஸ்லிம் சமூகம் இதனை ஒரு பேசு பொருளாக கையிலெடுக்கும் முயற்சி சற்று ஆறுதலளிக்கும் ஒருபுறம், மறுபுறத்தில் இத்தகைய செயற்பாடுகள் இலங்கை முஸ்லிம்கள் மீதான எத்தகைய தாக்கத்தினை விளைவிக்குமென சிந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் தமிழர் போராட்டம் தமிழர் புலம்பெயர் அமைப்பினூடாக சர்வதேச மயப்படுத்தளுக்குற்படுத்தப்பட்டு தமிழர்களுக்கான தீர்வு குறித்து சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்ற இவ்வேளையில் முஸ்லிம்களது பிரச்சினையில் தமிழர்களது வழிமுறையை பின்பற்றுவது  குறித்து ஆழ கலந்தாலோசிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.   

உலக அரசியல் ஒழுங்கினைப்பொருத்தவரை புலம்பெயர் அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட வடிவங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஓரளவு ஆறுதலளிக்க கூடியதாக அமைந்திருப்பது ஏற்புடையது. இந்தவகையில் இரண்டாம் உலக யுத்தங்களின் பின்னால் அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்களில்  இஸ்ரேல், பாலஸ்தீன், குர்டிஷ் , மியன்மார், இலங்கைத்தமிழர் புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச ரீதியில் தாக்கம் செலுத்திய அமைப்புக்களாக காணப்படுவதனை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இனரீதியாக அல்லது கொள்கை அடிப்படையில் இவ்வமைப்புக்கள் தொற்றுவிக்கப்பட்ட போதும் இஸ்ரேலியர்களின் புலம்பெயர் அமைப்பு இஸ்ரேல் என்ற தனி நாட்டை உருவாக்குவதில் வெற்றியடைந்ததை வரலாற்றுப்பாடமாக கொள்ளப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம்  புலம்பெயர் அமைப்புக்களின் சவால்கள் 

உலகிலே இலக்கினை அடைந்து கொண்ட புலம்பெயர் அமைப்புக்களில் இஸ்ரேலின் புலம்பெயர் அமைப்பு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.  நாசிக்களால் இனச்சுத்திகரிக்குப்புக்குள்ளாக்கப்பட்ட போதும் தமக்கென ஒரு நாட்டினையும் உருவாக்கியதுடன் சிறப்பு வாய்ந்த இனம் (ளுரிநசஅயஉல) என்ற தமது நம்பிக்கை கோட்பாட்டினை உயிர்ப்பிக்க தொடர்ந்து பாடுபட்டு வெற்றியடைந்திருப்பதனை வரலாற்று விமசகர்கள் முன்னுதாரணமாக கொள்கின்றனர். இத்தகைய பின்னணிகளை கொண்டே தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் தோற்றம் பெற்றது போன்று இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருக்களும்  உருவாகின. 

என்ற போதும் ஒரு புலம்பெயர் அமைப்புக்கொண்டிருக்க வேண்டிய அடிப்படை பண்புகளை முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள் கொண்டுள்ளதா என்பதனை இங்கு ஆராய வேண்டி உள்ளது. 

'உம்மா' என்ற கோட்பாட்டின் புரிதல்

உம்மா என்ற இஸ்லாமிய கோட்பாட்டியல் தொடர்பான தெளிவான சிந்தனை இலங்கை முஸ்லிம் சமூகத்தில்  முன்வைக்கப்படாமை ஒரு புலம்பெயர் அமைப்பொன்றை தோற்றுவிப்பதில் தாமதத்தினை ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இஸ்லாமிய கோட்பாட்டமைப்பில் புலம்பெயர் அமைப்பென்பது (னுயைளிழசய)  'உம்மா' என்ற கட்டமைப்பின்  ஒரு அங்கமாக கொள்ளப்படாமை ஒரு காரணமாக கொள்ளப்படமுடியும். புலம்பெயர் இலங்கை முஸ்லிம் சமூகம் தமது வாழ்வியல் தேவைகளுக்காகவே பெரும்பாலும் வெளிநாடுகளில் தமது இருப்பிடங்களை ஏற்படுத்திக்கொண்டமை மறுக்க முடியாத ஒன்றாகும்.  தாம் வாழும் நாடுகளில் தாய்நாட்டு முஸ்லிம்களுக்காக, தாய்நாட்டுக்காக தாம் செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பதனை சுய விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. இஸ்ரவேலர்களைப் பொருத்தவரை தாம் எங்கு வாழ்ந்த போதும் தமது சமூகம் குறித்து ஒன்று பட்ட சிந்தனையுடன் வாழ்வதனை காணமுடிகின்றது. இதனை இஸ்மத் ஒசால் என்பவரின் 'ஒரு யூதனாக இல்லாதிருப்பது' என்ற கவிதைத்தலைப்பில் 

உனது சுமைகள் பாரமானது 
 உன்னுடன் அது சகோதரனாக இருப்பதனால் இன்னும் பாரமானது 
உனது சகோதரர்கள் உனது உயிரிழப்புக்கள் 
உன்னுடைய நண்பனின் வாசல் படியை  நீ அடைந்தாள்
உனது புலம்பெயர் அமைப்பினை (னுயைளிழசய) உருவாக்கு 

ஊடக பலத்தினை  முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள் உருவாக்கி கொள்ளாமை.

ஊடக யுத்தம் மிக முக்கிய பாத்திரத்தினை நவீன கால உலக ஒழுங்கில் வகிக்கின்றது. யூதர்கள் தமது இலக்கினை அடைந்து கொள்ள ஊடகங்களை  தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். உலகின் புகழ் பெற்ற டீடீஊஇஊNNஇ குழுஓஇ சுழுருவுநுசு, உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்கள் அவர்களது கட்டுப்பாடில் இயங்குவது  குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில்தான் தமிழர் புலம்பெயர் அமைப்பு மிக கவனமாக உலகின் முன்னணி ஊடகங்களை தமக்கு சார்பானதாக மற்றிக்கொண்டதுடன் தமக்கென பல ஊடகங்களையும் உள்நாட்டிலும் , தாம் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் உருவாக்கி கொண்டனர். இதற்கு நல்லதோர் உதாரணமாக இலங்கை மீதான சர்வதேச கவன ஈர்ப்பை எற்படுத்திய சனல் 4  விவகாரத்தை குறிப்பிட முடியும். எனவேதான் பயங்கரவாத தடுப்பு நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன 'தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியில்  இலங்கை அரசு தோற்கடித்த போதும் ஊடக யுத்தத்தில் அது தொழ்வியடைந்துள்ளது' என குறிப்பிடுகின்றார்.

இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களது ஊடக துறை மீதான ஆதிக்கம் கேள்விக்குறியானதாகவே உள்ளது. தமக்கென குறைந்தது ஒரு நாளாந்த  பத்திரிக்கை வெளியிட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் முஸ்லிம் சமூகம்  உள்ளது. இதில் புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் தமது வகிபாகத்தினை சரிவர செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. பல்வேறு மாற்றுக்கருத்துக்களை முன்வைத்த முஸ்லிம் எழுத்தாளர்களும், பத்திரிகையாசிரியர்களும் புலம்பெயர்ந்து வாழும் இத்தகைய சூழ்நிலையில் தனியான ஊடகம் குறித்த அவதானம் முற்றுப்பெற உழைக்க வேண்டியுள்ளது.

அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராகமுன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பெரும்பான்மை சகோதர சமூகத்திற்கு தெளிவு படுத்த வேண்டிய அவசர சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் வாழ்வதனை இன்னொரு அம்சமாக கொள்வதுடன் இலங்கை முஸ்லிம்கள் பிரச்சினை சரியாக சர்வதேசத்திற்கு முன்  கொண்டு சௌ;ளப்படாமைக்கான  காரணமாக ஊடக ஆதிக்கம் இன்மையினை குறிப்பிட முடியும்.

பொருளாதார வலுவமைப்பினை ஏற்படுத்தல்

பொருளாதார ரீதியான தாக்கங்களை மேற்கொள்ளும் சக்தியினை  புலம்பெயர் முஸ்லிம் சமூகம் எட்டி இருக்காமை இன்னுமொரு சவாலாக  கொள்ளப்படவேண்டியுள்ளது. இலங்கை புலம்பெயர் சமூகம்  தாம் வாழும் நாடுகளில் கூளித்தொழிலாலர்களாகவே பெரும்பாலும் தமது பொருளாதார பின்னணியினை அமைத்துக்கொண்டுள்ளனர். மாறாக தாம் வாழும் நாடுகளின் தேசிய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு சமூகமாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு கலந்தாலோசிக்கப்படவேண்டிய அம்சமாகும். இலங்கையில் இருந்து கல்வியைத் தேடி புலம்பெயரும் முஸ்லிம் சமூகம் தமது இலக்கினை அடைந்து கொள்வதில் பின்னிற்பதனை  அவதானிக்க முடிகின்றது. பொருளியல் நிபுணர்களாகவும் முதலீட்டாலர்கலாகவும் மாறுவதற்கான கூட்டு முதலீட்டு ஒழுங்கு, கல்வியியல் விழிப்புணர்வு குறித்து புலம்பெயர் சமூகம் சிந்திக்க  வேண்டியுள்ளது. குறைந்தது இலங்கை முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படும் பொருளாதார வாழ்வியல் ஒழுங்கு குறித்த நெருக்குவாரங்கள் குறித்து தாம் வாழும் நாடுகளின் முக்கிய அரச, அரச சார்பற்ற அதிகார அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவைப்பாடும் உள்ளது. உதாரணமாக ஹலால் தொடர்பான பிரச்சினையில் மத்திய கிழக்கின் புலம்பெயர் சமூகம் தாம் வாழும் நாடுகளின் பொருளாதார துறையினருடன் கலந்தாலோசித்து சில அழுத்தங்களை பிரயோகித்திருக்க முடியும்.

புலம் பெயர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த பொறிமுறை

வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் புலம் பெயர் அமைப்புக்களை ஒருங்கிணைத்தல் என்பது மிக அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, மத்தியகிழக்கு என பல்வேறு பாகங்களிலும் சிதறிவாழும் தனித்தனி இலங்கை முஸ்லிம்களின் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு தொடர்பினை (நேவறழசம்) ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுமுள்ளது. இதனை செயற்படுத்த ஊடக பொறிமுறை அவசியமானதாகும். அதே போன்று இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு தாம் இயங்கும் ஆழ்புல எல்லையில்  காணப்படும் ஏனைய தமிழ், சிங்கள புலம்பெயர் அமைப்புக்களுடன் திறந்த கலந்துரையாடல்களை ஏற்படுத்தி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒன்றித்து வெற்றி கொள்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய போக்கு உள்நாட்டில் காணப்படும் தமிழ், சிங்கள அரசியல் தலைமைகளுக்கிடையில் காணப்படும்  அரசியல் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

புலம்பெயர் விற்பனர்கள் குழு உருவாக்கம்

இலங்கை அரசுடன் நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டு அடிக்கடி முஸ்லிம்கள் விடயம் குறித்து பேசும் அணியினை புலம்பெயர் சமூகம் இனம்கண்டு உருவாக்கவேண்டும். தமிழர் புலம்பெயர் சமூகம் ஆயுதப்போராட்டம் தோழ்வியடைந்த மறுகணம் இலங்கைக்கு விஜயம் செய்து கல நிலைகள் குறித்து அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டமை இங்கு ஜாபகப்படுத்த வேண்டிய ஒன்று. அதே போன்று புலம்பெயர் முஸ்லிம் சமூகம் தமது செயற்பாடு குறித்து நீண்ட கருத்தாடல்களை தமக்குள் மாத்திரமன்றி இலங்கையின் முக்கிய அமைப்புக்கள்,  அரசியல் குழுக்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டிய கடப்பாடும் உள்ளது. ஏனெனில் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை உள்நாட்டில் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களாலும், அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசியல் இலாபம்  தேடும் சக்திகளாலும் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்ற விளைவுகள் கலந்தாராயப்பட வேண்டிய அம்சமாகும்.  

முஸ்லிம்;களுக்கெதிராக செயற்படும் பௌத்த பயங்கரவாத அமைப்புக்களை முடக்குவதற்கான சர்வதேச சட்ட நியமங்களை பயன்படுத்துதல்.

தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு தீவிரவாத பௌத்த அமைப்புக்களை சர்வதேச செயற்பாடுகளில் இருந்து முடக்குவது என்ற சட்ட நடவடிக்கைகள் குறித்தும் புலம்பெயர் முஸ்லிம் சமூக அமைப்பு சிந்திக்க கடமைப்பாடு உள்ளது. குறிப்பாக  பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்படவேண்டிய பயங்கரவாத அமைப்பாக சர்வதேச மட்டத்தில் பட்டியல் படுத்தப்பட்டிருப்பதனை சாதகமாக  பயன்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.   

முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு இயங்கு தளத்தின்  எதிர்காலம் குறித்து கவனமாக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியுமுள்ளது. இஸ்ரேல், மியன்மார்( இராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிய மியன்மார் புலம்பெயர் அமைப்பு), இந்திய புலம்பெயர் அமைப்புக்கள் வெற்றியடையக் காரணங்களிலொன்ரு அவை இஸ்லாம் அல்லது முஸ்லிம் பெயர் தாங்காமல் அமைந்திருந்தமையினாலாகும் என்பதனை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தென்னாபிரிக்க பிரச்சினையுடன் சமகாலத்தில் தோற்றம் பெற்ற பாலஸ்தீன் புலம்பெயரமைப்பு வெற்றி பெறாமைக்கான   காரணங்களில்  ஒன்றாக இதனை காணமுடியும். 

எனவே இத்தகைய பல்வேறு சவால்களுக்கும் தேவைப்பாடுகளுக்கும்  மத்தியில் இலங்கை முஸ்லிம்களின் புலம்பெயர் அமைப்பு மீளமைக்கப்படவேண்டிய காலத்தேவையுள்ளது.     

1 comment:

  1. Masha allah, the great article and advice. Personaly I wish to say thanks and dear brothers/sisters pls we have to to take care above sayed msg.

    ReplyDelete

Powered by Blogger.