Header Ads



மலேசியா செல்கிறார் ஒபாமா - முஸ்லிம்கள் எதிர்ப்பு


மலேஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வருகை தரவுள்ளதையிட்டு அங்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்த்து நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் அமைப்புகள் கோலாலம்பூரில் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன. 

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இம்மாதம் 26, 27, 28 திகதிகளில் மலேஷியாவுக்கு வரவுள்ளார். 1966ம் ஆண்டுக்குப்பின்னர் அமெரிக்க தலைவர் ஒருவர் மலேஷியாவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட மலேஷியாவில் ஒபாமாவின் வருகை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அரபுலகில் அமெரிக்கா நடந்து கொள்ளும் விதம் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறைகளை அமெரிக்கா கட்டுப்படுத்தாமை போன்ற செயற்பாடுகளால் பொதுவாக முஸ்லிம்கள் அமெரிக்காமீது அதிருப்தியில் உள்ளனர். 

இந்நிலையில் இஸ்லாத்தின் எதிரியென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வர்ணித்துள்ள மலேஷிய முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் அமெரிக்க தூதராலயத்தின் வெளியில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். கோலாலம்பூரில் ஜும்ஆத் தொழுகைக்குப்பின் அமெரிக்க தூதராலயத்தை நோக்கி அணிவகுப்பாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் “அல்லாஹ் பெரியவன்” “பராக் ஒபாமா இறைதூதர் முஹம்மது நபியின் எதிரி” எனக் கூக்குரல் இட்டனர். அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைபாட்டை மலேஷியாவின் முன்னாள் பிரதமர் (1981-2003) மஹாதிர் மொஹம்மட் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.