Header Ads



திசை மாறிப்போன முஸ்லிம் இணையதளங்கள்...!

ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம்களுகென்று தனியான செய்தி இனைய தளங்கள் இருக்கவில்லை, முஸ்லீம்களின் செய்திகளை அறிய தமிழ் சகோதர்களின் இனையதளங்களை நாட வேண்டிய துரதிஷ்ட நிலை பல தசாப்தங்களாக இருந்தமை யாராலும் மறுக்க முடியாது.

காலப்போக்கில் ஊடகத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் பலனாக சில இனைய தளங்கள் உருவாகின. உதாரணமாக ஜப்னா முஸ்லிம், மடவள நியூஸ், காத்தான்குடி இன்போ, மற்றும் சோனகர் போன்றவைகளை குறிப்பிடலாம் .ஊடக துறையில் நீண்ட காலம் நீடித்திருந்த இடைவெளி நிரப்பப்பட்டு விட்டது என்ற ஒரு உணர்வு நம் சமூகத்தில் ஏற்பட்டது.

தாமதமான பிரவேசம் என்றாலும் குறிய காலத்தில் நல்ல பல பணிகளை மேற்கொண்டு வந்த மேற்படி இணையதளங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றியும், இஸ்லாமிய இயக்க வேறுபாடுகளின்றியும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் நலனை கருத்தில் கொண்டு செய்திகள் பிரசுரித்து வந்தன.

அண்மைக்கால இனவாத செயற்பாடுகளை காலதாமதமின்றி செய்தி வெளியிட்டு, முஸ்லீம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வையும் பல கூறுகளாக பிரிந்திருந்த முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தியும் வந்தன.

ஆனால், காலப்போக்கில் இயக்க வெறிகொண்ட சில விஷமிகள் மாற்று இயக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இயக்க விமர்சனங்களை கொட்டிட மேற்படி இணைய தளங்களை நாடினர். தவறை சுட்டிக்காட்டுதல் என்ற தொனியில் இல்லாத பொல்லாத செய்திகளை அனுப்பி மாற்று இயக்கத்தின் மீதி தமது பகையை கொட்டித்தீர்த்தனர்.

மேற்படி இணைய தளங்களும் ஏதாவது கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்தால் தானே வண்டி ஓடும் என்பதற்காக, தமக்கு வந்து குவியும் விமர்சனக் கட்டுரைகளையும், பொய்யான தகவல்களையும் ஆய்வு செய்யாமல் பிரசுரித்து, இயக்க விஷமிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தன.

இனவாதம் உச்சகட்ட நிலை அடைந்திருக்கும் நிலையில் உள் வீட்டு சண்டைகளை செய்தியாக வெளியிட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இணையங்களாக மாறி வருகின்றமை முஸ்லிம் சமுகத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உள்வாங்கும் விடயத்திலும் அவைகளை பிரசுரிக்கும் விடயத்திலும் இஸ்லாம் போதிக்கும் பண்புகளை படிப்படியாக தவிர்த்து வருகிறது என்பதற்க்கு அண்மைக்காலமாக வெளியாகி வரும் இயக்கவாத செய்திகள் நல்ல சான்று.

இது தொடரும் பட்சத்தில் மேற்படி இணையங்களே நம் சமுகத்துக்கு சாபமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, கட்சி சார், இயக்கம் சார் நலனுக்காக குரல் கொடுக்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் நலனுக்காக இயங்கும் இணைய தளங்களையே நம் சமுகம் எதிர்பார்க்கின்றது என்பதை இணைய தள ஸ்தாபகர்களும் அதன் நிருவாகிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

இயக்க விமர்சனம் சார்ந்த செய்திகளை தவிர்த்து, ஒட்டுமொத்த முஸ்லீம்களின் நலனை கவனத்தில் கொண்டு, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் இணைய தளங்களாக மக்கள் மன்றம் சென்றடைய வேண்டிக்கொள்கிறேன்.
அம்மார் அஹ்மத்.

3 comments:

  1. தம்பி அம்மார் நன்றி!

    இடுப்பு வலிக்கு தலையிடிக்கான மருந்து உண்டு பலனில்லை.இடுப்புக்குத்தான் மருந்து எடுத்தாலும் அது எதனால் வருகிறது என்பதை அறிந்து அதனை நிவர்த்தி செய்யாத வரைக்கும் இடுப்பு வலியும் விடாமல் வந்துகொண்டே இருக்கும்.

    முஸ்லிம்களுக்கான சோதனைகளும் கஷ்டங்களும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவில்லை என்பதே மிகப்பெரும் உண்மைக்காரணம்.மனிதர்களை நெறிப்படுத்த வந்த கடவுளின் வார்த்தைகளை மனிதன் அலட்சியம் செய்யும்போதே பல பிரச்சினைகளை அவன் நேர்கொள்கிறான்.வழிதவரிய மனிதனை மீண்டும் வழிக்கு கொண்டுவருவது உண்மை அறிந்தவர்களின் கடமை.

    எனவே,கடவுளின் வழிகாட்டுதலுக்கு மீண்டும் மனித சமுகத்தை ஒன்றுசேர்ப்பதென்பது-இறைவேதமும்,இருதித்தூதரின் வழியும்.(குர்-ஆன்/சுன்னா)

    சுயனலம் பாராது,இதனை மட்டும் பின்பற்றும் நல்லவர்கள் எம்மில் எத்தனை பேருண்டு?ரொம்ப குறைவு.குர்-ஆன்,சுன்னாவை தொட்டும் வராத எந்த விடயத்திலும் மனிதனுக்கு நலனிருக்காது,மேலும் அவைகளில்லாத எந்த நலனும் இல்லாமலுமில்லை. எனவே,தூய மதத்தை பின்பற்ற வைப்பதே முதல் தேவை.சொற்ப இலாபத்திற்காக மார்க்கத்தை விற்கும் நயவஞ்சகர்களை நாம் அடையாளம் கண்டு மக்களுக்கும் அடையாளப்படுத்த வேண்டும். அந்த வகையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினர் முதல் வர்க்கத்தினர்,இவர்கள்தான் மார்க்கத்தை சுக்குனூராக இல்லாத பொல்லாதவைகளைக்கொண்டு மாசுபடுத்தியவர்கள். ஒரு மனிதனின் மானத்தை பாதுகாக்க சொல்லும் இஸ்லாம்,அதே மனிதனால் மனித குலத்திற்கே கேடு என்றால்,அவனை வெளிச்சம் போட்டு காட்டி மக்களை அவனிடமிருந்து காப்பாற்றவும் சொல்லுகிறது.

    ReplyDelete
  2. இணைய தளங்கள் திசை மாறவில்லை. நாமே திசை மாறியிருக்கிறோம்.
    சகோதரர் அம்மார் அஹ்மத்!
    உங்கள் ஆக்கம் சிறந்தது தான். ஆனால் நடை முறைப்படுத்தலாமா என்பதே கேள்விக்குறி.
    உதாரணத்துக்கு இங்கு குறிப்பிடுகிறேன்.
    என்னை தப்லீக் சார்பான ஒருவராக வைத்துக் கொள்ளுங்கள். நான் மர்கஸைப் பற்றியோ, தப்லீக் சார்பான ஒரு நிகழ்ச்சி பற்றியோ எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட ஓர் காணொளியையும் வெளியிடுகிறேன். என்னைச் சார்ந்தவர்கள் வாசித்தும் கேட்டும் மகிழ்வார்கள். ஆனால் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வெறுப்பார்கள்.
    என்னை ஜமாத்தே இஸ்லாமி சார்பான ஒருவராக வைத்துக் கொள்ளுங்கள். நான் ஜமாஅத்தின் அமீர் பற்றியோ, ஜமாஅத்தே இஸ்லாமி சார்பான ஒரு நிகழ்ச்சி பற்றியோ எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட ஓர் காணொளியையும் வெளியிடுகிறேன். என்னைச் சார்ந்தவர்கள் வாசித்தும் கேட்டும் மகிழ்வார்கள். ஆனால் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வெறுப்பார்கள். இவ்வாறே, தௌஹீத், ஹுப்பு என ஒவ்வொரு இயக்கங்களின் நிலையும் இப்படித்தான். எனவே சுதந்திரமாக எல்லோரின் செய்திகளையும் வெளியிடுவதாகவே இணையதளங்கள் இருக்க வேண்டும். தமக்கு எது சயான வழியென்று தெளிவாகின்றதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இணைய தளங்களைக் குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை.
    மேலும், யார் எந்தக் கருத்தை முன் வைத்தாலும் ஒரு சாராருக்கு சார்பாகவும், இன்னொரு சாராருக்கு எதிராகவும் அமைவது சகஜமே. அதற்காக பிரசுரிப்போர் பக்க சார்பானவர்கள் என்று கருதுவது தவறு. எப்போது பிரசுரிப்போர் தனது கருத்துக்கு சாதகமானதை மாத்திரம் பிரசுரித்தால் அதுவெ தவறானது.

    ReplyDelete

Powered by Blogger.