Header Ads



முஸ்லிம்கள் வீடுகளை வாங்க, விஸ்வ ஹிந்து பரிஷத் தடை

குஜராத்தில் முஸ்லிம்கள் வீடுகளை வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் தடை விதித்துள்ளது.

குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலையிட்டு, முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா உத்தரவிட்டும் இருக்கிறார்.

மேலும், "ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும்" என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கூறியிருக்கிறார். மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளார்.

தொகாடியாவின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் வி.ஹெச்.பி யின் இந்த நிலைப்பாடு குறித்து பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன? என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments

Powered by Blogger.