Header Ads



தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ள குடும்பவியல் மாநாடு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்  ஏற்பாடு செய்துள்ள மாபெரும் குடும்பவியல் மாநாடு எதிர் வரும் மே மாதம் 4ம் திகதி காலை 09.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சிலாபம் தர்கா வீதியில் உள்ள ஈச்சம்பிட்டி பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் தலைமையில் நடைபெரும் இம்மாநாட்டில் குடும்பம் தொடர்பான பல தலைப்புகளில் உரைகள் ஆற்றப்படவுள்ளன. 

“கணவர் மனைவி உறவும் கண்குளிர்ச்சி மிகு குடும்ப வாழ்வும்” என்னும் தலைப்பில் தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்களும்

“எது நபிவழித் திருமணம்”  என்னும் தலைப்பில் தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோதரர் அப்பாஸ் அலி (Misc) அவர்களும், 

“சீதனமும் தவறான சொத்துப்பங்கீடும்” என்னும் தலைப்பில் எம்.டி.எம் பர்சான் (அழைப்பு பிரதம ஆசிரியர்), 

”மீடியாவும் சீரழியும் இன்றைய சமுதாயமும்” என்னும் தலைப்பில் எப்.எம்.ரஸ்மின் (Misc), 

”இறையச்சமும் ஒழுக்க வாழ்வும்” என்னும் தலைப்பில் ஆர்.அப்துர் ராஸிக் (பொதுச் செயலாளர் SLTJ), 

”வஹியின் ஒளியில் பிள்ளை வளர்ப்பு” எனும் தலைப்பில் ஹிஷாம் (Misc),  

குடியைகெடுக்கும் போதை” என்னும் தலைப்பில் அஜ்மீர் (அமீனி), 

”பெற்றோரைப் பேனுவோம்” எனும் தலைப்பில் பாயிஸ் (Dip-in-sc), 

மேற்குறிப்பிடப்பட்ட தலைப்புக்களில் மாநாட்டு உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட முழுக் குடும்பமும் கலந்து கொண்டு இம் மாநாட்டை சிறப்பிக்குமாறு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் வேண்டுகின்றது.

No comments

Powered by Blogger.