Header Ads



பேராசிரியர் பஸ்லி நிசாரின் 33 கோடி ரூபா அன்பளிப்பில் கொழும்பு மகளிர் கல்லூரிக்கு கட்டிடங்கள்


பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கென அகில இலங்கை சோணகர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசார் அவர்களின் அன்பளிப்பாக 33 கோடி ருபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு கல்லூரி அதிபர் கலாநிதி ஹர்ஜான் மன்சூர் தலைமையில் இன்று 21-04-2014 ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இக் கட்டிடத்திற்காக  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு  கல்வி அமைச்சரினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது. இருந்தும்  கடந்த 8 மாதங்களாக 8 மாடிகளுக்கான வரைபுபடத்தையும் நிர்மாணத்திற்காக கல்வியமைச்சின் அனுமதியும் நகர அபிவிருத்தி அதிகாரசபை மாநகர சபை அனுமதி கடந்த வாரமே கிடைக்கப்பெற்றது. 

அதற்காகவே இன்றில்pருந்து நிர்மாணப்பணிகள் பாடசாலை மாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பிணர்கள், அகில இலங்கை சோனக சங்கத்தின் உறுப்பிணர்கள் மத்தியில் துஆ பிராத்தனையுடன் பேராசரியர் பஸ்லி நிசார் ஆரம்பித்து வைத்தார்.

இங்கு உரையாற்றிய கல்லூரி அதிபர் கலாநிதி ஹர்ஜான் மன்சுர் தெரிவித்தாவது,

ஒவ்வொரு வருடமும்  1ஆம் ஆண்டுக்கு  அனுமதி கேட்டு 1900 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் விண்னப்பிக்கின்றனர். ஆனால் எங்களுக்குரிய 4 வகுப்பறைகளில்  160 மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கமுடியும்.  ஏனைய 1740 முஸ்லீம் மாணவிகளது கல்வி நிலை என்ன? ஆகவே தான் பேராசிரியர் பஸ்லி நிசார்  போன்ற கல்விமாண்கள் கொழும்பு வாழ் முஸ்லீம் பெண்களது கல்விவளர்ச்சிக்காக இப்பாரிய நிதி உதவியை வழங்கி எமது சமுகத்தின் பெண்களின் கல்விக் கண்களை முன்னேற்றுவது சம்பந்தமாக இந்த கல்லூரியின் சமுதாயம் என்றென்றும் மறக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.   



No comments

Powered by Blogger.