Header Ads



'சிப்ஸ்' மட்டுமே உணவு: 15 ஆண்டாக சாப்பிடும் பெண்

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, 'சிப்ஸ்' வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என, பெற்றோர் எச்சரிப்பர். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 15 ஆண்டுகளாக, சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இங்கிலாந்தில் வசிப்பவர், ஹைனா, 20. இவரின், 5வது வயதில், வினோத நோய் ஏற்பட்டது. எந்த உணவைக் கண்டாலும், இவர் உடல்நலம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, 5 வயதில் இருந்து, இப்போது வரை சிப்சை மட்டும் சாப்பிட்டு வருகிறார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், 'செலக்டிவ் ஈட்டிங் டிஸ்ஆர்டர்' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரே மாதிரியான உணவை உட்கொள்வர் என்றும், வேறு உணவைக் கண்டால், இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர். இதையடுத்து சமீபத்தில், மனநல ஆலோசகர் பெலிக்ஸ் எகனாமிக்ஸ் என்பவர், ஹைனாவை, 'ஹிப்னாட்டிசம்' எனப்படும் மன மயக்கத்தில் ஆழ்த்தி, அவர் மனநிலையை மாற்றி, பீட்சா உணவை சாப்பிட வைத்தார். சிப்சை தவிர்த்து, வேறு உணவை சாப்பிட்டு அறியாத ஹைனா, இன்னும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யமான விஷயம்.

No comments

Powered by Blogger.