Header Ads



தமிழ் கூட்டமைப்பின் கனவு நனவாக மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் - பசில்

வடமாகாண சபையை கைப்பற்றவேண்டும் என்ற கூட்டமைப்பின் கனவு நனவாக மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

வடக்கில் தமது பொறுப்பில் ஏற்றுக்கொண்ட உள்ளூராட்சி மன்றங்களைக் கூட உரிய முறையில் கொண்டு நடத்த முடியாதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபையை கொண்டு நடத்த முடியாது. வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றவேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றிவிட்டால் கூட்டமைப்பினால் அங்கு அரசியல் செய்ய முடியாது போய்விடும் என அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஏ-9 வீதி ரயில் வீதி, மின்சாரத் திட்டங்கள் என்பனவற்றை மாகாண சபையினால் செய்ய முடியாது. அவற்றை தற்போது நாங்கள் மத்திய அரசாங்கத்தின் ஊடாக செய்துவிட்டோம். 

ஏனைய மாகாணங்களை அடகு வைத்துவிட்டே வடமாகாணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து அபிவிருத்திப் பணிகளை செய்துவருகின்றோம். அந்தவகையில் மாகாணத்துக்குரிய சுகாதாரம் கல்வி வேலைவாய்ப்பு கைத்தொழில் விவசாயம் மீன்பிடித்துறை மாகாண வீதிகள் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தெரிவு செய்யப்படும் மாகாண நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும். இதேவேளை வட மாகாண சபையை கைப்பற்றவேண்டும் என்ற கூட்டமைப்பின் கனவு நனவாக மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. வடக்கு மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து மாகாணத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வார்கள் என்பது எமது நம்பிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நீங்கள் தேர்தலுக்காகச் செலவழிக்கின்ற ஆடம்பரச் செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொண்டாலே வடக்கு மக்கள் வளமாக வாழக்கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய்களை மீதப்படுத்தலாம். ஏன் ஏனைய மாகாணங்களை வடக்குக்காக நீங்கள் அடகு வைக்க வேண்டும்?

    வடக்குத் தேர்தலில் 24க்கு மேற்பட்ட ஆசனங்களையும் 2 போனஸ் ஆசனங்களையும் த.தே.கூட்டமைப்பு பெறும் என்பது இன்றைய நிலவரம். உங்களின் அரசாங்கம் அடாவடித்தனங்களற்ற நீதியான தேர்தலை நேர்மையாக நடாத்தினால் இதை விடவும் கூடுதலான பெறுபேறு ஏற்படும் என்பதுஎனது நம்பிக்கை!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.