Header Ads



தாம் நினைத்ததை சாதித்த பௌத்த பேரினவாதிகள்


(Umar Ali)

ஊடகங்களின் வாயிலாக கிடைத்த தகவல்களின்படி இக்கட்டுரையை வரைகின்றேன்.கிராண்ட்பாஸ் மஸ்ஜித் விவகாரத்தில் பௌத்த பேரினவாதிகள் தாம் நினைத்ததை சாதித்துள்ளனர். புதிய பள்ளிவாசலில் தொழக்கூடாது என்று அறிக்கை விடுத்தனர்.பலமுறை நேரில் வந்து அச்சுறுத்தினர்,சட்டப்பிரச்சினையை முன்வைத்தனர்.அரசாங்கத்திற்கு போட்டுக்கொடுத்தனர் எதுவுமே எடுபடாத போது வன்முறையில் இறங்கி பள்ளிவாசலையும் தொழுதவர்களையும் தாக்கியிருக்கின்றனர்.

அதாவது தெளிவாக இருந்த ஒரு நீரோடையில் இரங்கி அதை குழப்பி விட்டு அதில் மதவாதத்தின் நச்சு விதைகளை விதைத்து, இப்பொழுது குழம்பிய குட்டையில் கலவரப்பட்டிருக்கின்ற  முஸ்லீம்களை சமாதானப்படுத்துவது என்ற போர்வையில் பேச்சுவார்த்தைக்கு வரச்செய்து அங்கே  தமது விருப்பங்களை அதிகாரபூர்வமாக அரங்கேற்றி பங்கு பற்றியவர்களின் கருத்தை மிதித்துவிட்டு  அவர்களது விருப்பத்தை மேலோங்கச்செய்திருக்கின்றார்கள்.இதன்போது என் முஸ்லீம்கள் உடன்பட்டார்கள் என்று புரியவில்லை..? 

இப்பொழுது நடைபெற்ற தாக்குதலுக்கு சட்டரீதியான நடவடிக்கை என்ன ? ஈடுபட்டவர்கள் நாளை சுதந்திரமாக உலாவத்தான் போகின்றார்களா?

பேச்சுவார்த்தை மேடையில்  நமது காரணங்கள் ஏன் ஏன் வலிமை சேர்த்துப் பேசப்பட்டு அதிலே நிலையாமல் நிற்க முடியாமல் நிலை தடுமாறி பௌத்தர்களது கோரிக்கையின் பால் இறுதி முடிவு எடுக்க என்ன காரணம். இவ்வாறான கேள்விகள் மனதிலே எழுகின்றன.

உண்மையிலே பதில் என்ன என்று சிலருக்கு மட்டும் தெரியும். ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். ஏனெனில் சில சொகுசுகளை இழக்க நேரிடலாம் உண்மையைப்பேசி பிடிவாதமாக நின்றால்.தேவையான இடத்தின் அரவணைப்பு கிட்டாது கோபப் பார்வையே படும். 

இதற்கு முன்னர் நடைபெற சம்பவங்கள் எல்லாவற்றிலும் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.தாக்குதல்கள் நடாத்துவது,இடிப்பது எரிப்பது இறுதியில் ஏனென்று கேட்கும்போது சமாதானம் பேச்சுவார்த்தை என்று நமக்கு எதுவித பலனும் இல்லாத கூட்டமொன்றை அரங்கேற்றி சருவதேச நாடுகளுக்கு அரசு தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு  என்று கொட்டை எழுத்தில் செய்திவரும். தலைப்புகளைப்படித்துவிட்டு  பலர் அமைதியடைந்து விடுவார்கள்.

பந்திகளைப் படிக்கும்போதுதான் அதன் சாணக்கியமும் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் கோசம் போடாமல் குரல்வளை நசுக்கப்பட்டிருப்பதும் புரியும்.

முடிவாக முஸ்லீம்களது தோல்வியும் முஸ்லீம்களுக்கான அநியாயமும் நமது அமைச்சர்கள், பிரதிநிதிகளின் மறைமுகமான, நிர்பந்த ஒப்புதல்களின் மூலம் எட்டப்பட்டிருக்கின்றது.தலைவர்கள் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் என்ற விடயத்தில் காட்டிய கரிசனை பாராட்டத்தக்கது. ஆனால் அந்த வேகத்தில் ஒரு விவேகமும்,நிலை தவறாதும்  ஒரே நிலையாய் இருந்திருக்க வேண்டும் ஏனையோரும் ஒற்றுமையாய் ஒரே நிலைப்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.

13 comments:

  1. YEMATHU ARASIAL VAATHIHAL ARASAANNKATHIN ADI VARUDIHAL,YEMATHU KORIKKAIHALAI VIDDA PIDIYAHE NINTRU VIDDU KODUTTE IVARHAL PALLIVAASALAI THAAKKIYAVARHALAI VIDE KEVELAMAANAVARHAL, SOTHTHUHALUKKAHE SOOTHTHU KODUKKUM SAMOOHE THUROHIHAL NAALAI YAARAI VENDUMENTRALUM KOODI KODUPPARHAL. SO MY DEAR MUSLIM BROTHERS DON'T BELEIVE ANY MUSLIMS POLTICIANS ALL ARE SELFISH.

    ReplyDelete
  2. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஓர் அணியின் கீழ் வரவேண்டும். அதுபோல் முஸ்லிம் மத தலைவருகளும் வரவேண்டும். இரு பகுதியினரும் முஸ்லிம்களை ஓரணயின்கீழ் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நாம் நினைப்பது நடப்பது சாத்தியமாகலாம்.அல்லாதவிடத்து நாம் அடிமைப்பட்ட, அவமானப்பட்ட, தலைகுனிந்த சமுகமாகவே இருப்போம் என்பது உறுதி. செய் அல்லது செத்துமடி. நடக்குமா?

    ReplyDelete
  3. My Dear Muslim Lawyers please get together and take legal action even if wrong judgement given no problem. at least other countries will understand our situation. We never taken any legal action up to now for any case. we every body has to face Allah's caurse.
    Our Family, Our wealth and other matters are better than jihad in the name of Allah?
    Dear Allah Protect US.

    ReplyDelete
  4. சவால்விட்ட‌ பொலிஸ் அதிகாரியின் சீருடை பாதுகாப்பட்டுள்ளது. சந்தோசம்!!!!!

    ReplyDelete
  5. முஸ்லிம்களிடையே இல்லாத ஒற்றுமையும் ஒருமைப்பாடும்தான் தொல்விகளுக்குக் காரணம்.

    ReplyDelete
  6. மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

    அல்-குர்ஆன் 16:61.

    ReplyDelete
  7. ஒவ்வொறு தொழுகைக்குப் பிறகும் குனூத் ஓத வேண்டிய சந்தர்ப்பம் இது..
    இதற்கும் ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை இருக்க வேண்டுமா..???

    ReplyDelete
  8. இது எங்களுக்கு தோல்வி அல்ல. பலய பள்ளியை கட்டுவதர்கு சில இடையுரு இருப்பதன் காரனமாக தான் புதிய பள்ளியை கட்டினார்கள். இப்போ அந்த இடையுராக இருப்பவற்றை முலுமயாக அகற்றி பலய பள்ளியை எங்களுக்கு விரும்பிய வாரு கட்டுவதற்கு அனுமதி கிடைத்திருக்கிரது. இது தோல்வியா? வெளிப்படயாக அவர்களுக்கு வெற்றியாக தென்பட்டாலும், இது எங்களுக்கு தோல்வி அல்ல.

    ஆனால் சட்டத்தை கையில் எடுத்த காடையர்களுக்கு தன்டனை வளங்காமல் விட்டு வைப்பது தான் பெரிய தவரு. இந்த காடையர்களுக்கு எதிராக பொருப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்கள் கடுமயான தன்டனை வளங்குவதர்கு சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், மீன்டும் இதே மாதிரி வன்முரைகளை தைரியமாக திட்டமிடடு செய்வார்கள்.

    ReplyDelete
  9. ஒற்றுமையா? அப்பிடின்ன? கடைல இருந்தா சொல்லுங்க?

    ReplyDelete
  10. எங்கே போனது ஜமியதுல் உலமா

    ReplyDelete
  11. F irst and foremost Muslims must decide whether they want to continue living in Srilanka.If they
    want to,then there are so many things they must prepare for themselves.Their rights are being
    challenged everyday.They are being forced to fight back to be killed.This is being carried out
    with the consent of part of Muslim community.Muslims react or not,the trend will continue.This
    is what we see happening.If there's anyone to think that things will change under a UNP regime,
    then wait for a shock.

    ReplyDelete

Powered by Blogger.