Header Ads



ஈமானியனே உனக்காய்..!


சாதிகீன் அப்துல் கபூர்

(தஃவா பீடம். இஸ்லாமிய பல்கலைக்கழகம் - மதீனா)

சாந்தி மார்க்கம் இன்று
சாக்கடைகளின் கைகளினால்
சாட்டையடி படுகிறது
சார்ந்திருப்போர் கண்முன்னே...

சீரழிந்த சிந்தனைகளில்
சிந்தனை தேசம்
சிக்கித் தவிக்கிறது
சிந்தனையாளர் கண்முன்னே...
விகாரமாய்ப் போனது
விண்ணவன் தந்த
விரிவான மார்க்கம்
வீணர்களின் கரங்களால்...

நிலவைப் பார்த்து – சில
பேய்களின் விமர்சனங்கள்
மலையைப் பார்த்து – சில
நாய்களின் குரைத்தல்கள்...
சூரியனை ஊதியணைக்க
சூடு சொரணையற்ற ஒரு கூட்டம்...
மின்னலைக் கையால் பிடிக்க
மினக்கெடுகிறது சில குரங்குகள்...

இஸ்லாம் ஒன்றும்
அழித்து விட
கரும்பலகை எழுத்தல்ல
மறைத்து விட
மலிந்த பொருளுமல்ல
நீயாய் கையாட
உன் வீட்டு சொத்துமல்ல
நீதம் தவறிப் போக
நம் நாட்டு அரசாங்கமுமல்ல...
அனைத்தையும் தாண்டி
அசைக்க முடியா பேரரசனின் சொத்து அது...

ஆச்சரியப்படுகிறேன் ஈமானியனே,
இஸ்லாம் ஒடுக்கப் படுகிறது என்ற
உறுதியற்ற உன் வார்த்தை கண்டு...
அப்ரஹாவைக் காண்கையில்
அபூதாலிபிடம் இருந்த ஈமான் கூட
இழக்கப் பட்டவனாய் நீ...

காவி உடைகள் கத்தியெடுக்கவும்
சில காவாலிகளால்
ஹலால் கேலியாக்கப்படவும்
புத்தியற்ற சேனாக்கள்
பொதுமயமாகவும்
காரணம் புரிகிறதா உனக்கு...???

இஸ்லாமியக் கப்பல்
கடந்து வந்த பாதைகளில்
இந்த அலைகள் சகஜம் தான்...
ஆனாலும்,
தூது சுமக்கும்
எங்கள் கைகளில்
தூய்மையான வரலாறு...

தோழனே,
உலகமே விலை என்றாலும் 
இழக்க முடியா 
இனிய மார்க்கத்தின் 
சொந்தம் நாம்...
எம் தாய் தேசத்தில் 
காவி உடைகள் 
காடைத் தனம் செய்கின்றன...

எங்கே உன் அறிவாயுதம்...???
எடுத்து ஒரு வேலியிடு...
மார்க்கம் வாழ – நாம் 
நாம் மண்ணாவோம் துணிந்திடு...

இனி தான்,
உன் வரிகளுக்கு 
வலிமை தேவை
எழுத்துக்களுக்கு 
எண்ணம் தேவை
காவிகளின் விமர்சனங்களுக்கு
காத்திரமான பதில் தேவை
வெட்டிப் பேச்சுக்களை விட்டு
தட்டிக் கொடுக்கும் சிந்தனை தேவை
நமக்கேன் எனும் 
அசமந்தம் விட்டு
அசைக்க முடியா நம்பிக்கை தேவை
இழந்த உதிரத்திற்கு பகரமாய்
ஒரு துளி வியர்வை தேவை...

புறப்படு தோழனே,
நீயும், நானும் கைகோர்ப்போம்
தீனின் பணிக்கென செயற்படுவோம்
தேவை எனின் உயிர் கொடுப்போம்
அர்ஷின் நிழலில் அணி திரள்வோம்... 

No comments

Powered by Blogger.