Header Ads



அஸாத் சாலியை கைது செய்ய மீண்டும் முயற்சி - வீட்டில் அதிரடி தேடுதல் (படம்)


தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலியை கைது செய்ய முனையும் தொடர் முயற்சியின் ஒரு கட்டமாக  (28.04.13) மாலையும் இரகசிய பொலிஸார் தேடுதல் நடத்துவதற்கான எவ்வித சட்டரீதியான ஆவணங்களுமின்றி அவரது வீட்டுக்குள் புகுந்து மீண்டும் சோதனையிட்டுள்ளதோடு அஸாத் சாலி எங்கே என்றும் கேட்டுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் அஸாத் சாலி வீட்டில் இருக்கவில்லை. அவரது மனைவியே பொலிஸாரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வெளியே சுமார் எட்டுப் பேர் அடங்கிய ஒரு பொலிஸ் கோஷ்டியை நிறுத்திவிட்டு, அஸாத் சாலியை எதிர்வரும் 29ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பொலிஸ் தலைமையக நான்காம் மாடியில் லசன்த ரத்னாயக்க என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு எழுத்து மூலம் ஒரு குறிப்பையும் வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். பொலிஸார் தொடர்ந்தும் அஸாத் சாலியின் வீட்டுக்கு வெளியே நிலை கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தன்னை கைது செய்ய முயன்ற ஒரு விடயத்தில் அஸாத் சாலி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஓரிரு மணிநேரத்தில் ஒளிபரப்பான அரச தொலைக்காட்சியான ஐ.டி.என்.தொலைக்காட்சி செய்தியில் அஸாத் சாலி நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் தோற்றுவிக்க துணை போவதாகவும், வெளிநாட்டில் புலம் பெயர்ந்த சமூகத்தோடு இணைந்து அரச விரோத காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்துக்கு விரேதமாகச் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களோடு தொடர்புபட்டு அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரவதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீத நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் செய்தி ஒளிபரப்பாகியுள்ளது.

(27.04.13) இன்று ஒளிபரப்பான ஐ.டி.என் இன் பிரதான மாலை நேர (மாலை 7.00மணி) சிங்களச் செய்தியில் பிரதான தலைப்புச் செய்திக்குள் இந்த விடயம் அடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



3 comments:

  1. first try to arrest BBS members. Asad is the only one minister talking to the muslim community.he never did any terror action.now no more democracy in srilanka.Goverment act as a buddist hitlar,

    ReplyDelete
  2. ஒவ்வொரு முஸ்லிமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் ஆசாத்சாலி அவர்களின் பாதுகாப்புக்கு

    ReplyDelete
  3. First gotha Rajapakse should be taken to the 4th floor for inquires making cooperation with racist monks for making country in to troble

    ReplyDelete

Powered by Blogger.