Header Ads



சி.ஐ.டி பொலிஸாரால் அஸாத் சாலி விசாரணை - வீட்டுக்கு வந்து வாக்கு மூலம் பதிவு



நாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களை தூண்டும் வகையில் கையடக்க தொலைபேசி வழியாக குறுந்தகவல்களைப் பரப்பியமை தொடர்பாக இன்று (22.04.13) நண்பகல் சி.ஐ.டி பொலிஸார் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் அஸாத் சாலியை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இது சம்பந்தமாக சி.ஐ.டி தலைமையகத்துக்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு சி.ஐ.டி யினர் அஸாத் சாலியை கடந்த சில வாரங்களாக வற்புறுத்தி வந்தனர்.ஆனால் அங்கு வர முடியாது. தேவையானால் வீட்டுக்கு வாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன் என்று அஸாத் சாலி திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்நிலையில் இன்று முற்பகல் அஸாத் சாலியின் வீட்டுக்கு வருகை தந்த பொலிஸார் அண்மைக் காலங்களில் ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்றை சேர்ந்த ஊடகவியலாளர் ஓருவர் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சுமார் 27 குறுந்தகவல்களைப் பரிமாறியுள்ளதாகவும் அவற்றில் மூன்று தகவல்கள் அஸாத் சாலிக்கு அனுப்பப்பட்டுள்ளமை பற்றியும் கேள்வி எழுப்பினர்.

'ஏன்னுடைய தொலைபேசி இலக்கம் ஏராளமான மக்களுக்குத் தெரியும். தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் என்னோடு பேசுகின்றனர். அதேபோல் தினசரி நூற்றுக்கணக்கான குறுந்தகவல்களும் எனக்கு வருகின்றன.யார் என்ன தகவலை எப்போது அனுப்புகின்றார்கள் என்றெல்லாம் என்னால் நினைவில் வைத்திருக்க முடியாது.அப்படி நான் அவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவும் முடியாது. மேலும் நீங்கள் குறிப்பிடும் இந்தத் தகவல் எனக்கு வந்ததாக சொல்லுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது தகவல் அனுப்பியவரையே தவிர அதைப் பெற்றுக் கொண்ட என்னையல்ல' என்று பதில் அளித்துள்ளார்.

பொலிஸார் எழுப்பிய மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அஸாத் சாலி 'நாட்டில் குழப்பம் விளைவிப்பதும் விளைவிக்க முயல்வதும் பதற்ற நிலையை ஏற்படுத்துவதும் நாங்கள் அல்ல. அது யார் என்பதை நான் உங்களுக்கு ஆதாரபூர்வமாகக் காட்டுகின்றேன்' எனக் கூறி அநுராதபுரம் தர்கா உடைக்கப்படுவது, தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்படுவது உட்பட இன்னும் பல முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பற்றி தன் வசம் உள்ள படங்களை அவர்களுக்குக் காட்டியுள்ளார். 'உங்களது உயர் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் தான் இவ்வளவு அநியாயமும் இந்த நாட்டில் நடந்திருக்கின்றது. அவர்களை விசாரித்தால் இந்த சம்பவங்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இந்த குழப்பவாதிகளின் அனுசரணையாளர்கள் யார்? பாதுகாவலர்கள் யார்? என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதை விட்டு விட்டு முஸ்லிம்களை ஆத்திரப்படாமல் அமைதியாகவும், சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்ளுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் என்னை விசாரணை செய்வதில் பலனில்லை. இவ்வாறு மொட்டை குறுந்தகவல்கள் அனுப்பி முஸ்லிம்களையோ மற்றவர்களையோ குழப்ப வேண்டும் என்ற எண்ணமோ தேவையோ எனக்கு கிடையாது. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. நான் எதைப் பேசினாலும் நேரடியாக பேசுவேன்.மக்களுக்கு சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வேன்.

அதில் எந்த அச்சமும் எனக்கில்லை. நடந்த சம்பவங்களை பொலிஸாராகிய நீங்களே மூடி மறைக்கப் பார்க்கின்றீர்கள். இவை தொடர்பாக இதுவரை ஒருவரையாவது நீங்கள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளீர்களா? பொலிஸ் மா அதிபர் மிகவும் நல்லவர்.அவர் தனது கடமையை பாரபட்சமின்றி செய்வார் என்று இன்னமும் நாம் நம்புகின்றோம்' என்று பதில் அளித்துள்ளார். வாக்குமூலத்தைக் குறிப்பெடுத்துக் கொண்ட பொலிஸார் அங்கிருந்து அமைதியாகத் திரும்பிச் சென்றுள்ளனர்.



13 comments:

  1. இதுதான் தலைமை.

    ReplyDelete
  2. பாராட்டத்தக்க நடைமுறை. பாராட்டுக்கள்.
    எதிர்க் கட்சியாக இருக்கும்போது மட்டும் இப்படிப் பேசாமல் ஆளும் கட்சிக்குப் போனாலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் உங்களைப் போன்றோர்களை அடக்கி ஆழ வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறார்கள்.இதில் அடங்கிப் போனவர்களும் உண்டு.நம்மை இறைவன் பாதுகாப்பான்.மேலும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பவர்களில் நானும் ஒருவன்.....

    ReplyDelete
  4. அஞ்சா நெஞ்சமே..!! சரியான பதில்..!!

    உங்கள் மன உறுதியையும்.. ராஜா தந்திரமான பதிலையும் மனதார பாராட்டுகிறேன்..

    நிதானம் இழக்காமல் உங்கள் பனி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..!!

    ReplyDelete
  5. இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களைப்பாதுகாப்பானாக.
    அடுத்த தேர்தலில் உங்கள் கரத்தைப் பலப்படுத்த நாங்கள் தயார்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 'அஞ்சற்க! அழ்ழாஹ் நம்மோடு இருக்கின்றான்!' (அல்குர்ஆன்)

    ReplyDelete
  8. சகோதரர் அசாத் சாலி அவர்களின் துணிச்சல் உன்மையிலேயே வியக்க வைக்கிறது. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அஞ்சி, அல்லாஹ்வுக்காக அநியாங்களை எதிர்த்து நிற்பதற்கு நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு. இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ் அருள் செய்வானாக; ஆமீன்!

    ReplyDelete
  9. சகோதரர் ஆசாத் சாலி அவர்களே! இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு உதவிசெய்வான், எப்படியாவது இவரை உள்ளே தள்ளலாமென்பதிலும், எதையாவது சோடித்து குற்றம்சுமத்தலாமென்றும் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் இன்ஸா அல்லாஹ் கூடுதலாகச்சொல்வதற்கில்லை நாங்கள் செய்யும் துஆப்பிரார்த்தனை சகோதரர் அசாத் சாலிக்கு பாதுக்காப்பாக இருக்கும். அல்லாஹ் அவரைப்பாதுகாப்பான்.

    அனைவரும் சகோதரருக்காக பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  10. உங்களை போன்ற தலைவர்கள்தான் நமது சமூகத்துக்கு தற்போது தேவை உங்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு கிடைக்க நாங்கள் பிராத்திக்கிறோம் இன்னும் உங்கள் கரம் பலப்பட வேண்டும்
    யா அல்லாஹ் இவரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்துடுவயாக இன்மையுளும் மருமையுளும் வெற்றியை கொடுத்துடுவயாக...........................

    ReplyDelete
  11. அல்லாஹ் உங்களுடைய ஆயுலை மேலும் நீட்டி. முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும். இந்த அஞ்சா நெஞ்சை இன்னும் உறுதிப்படுத்துவானாக. ஆமீன். பல இலட்சம் நபர்களின் துஆவைப் பெற்றுக்கொன்டிருக்கும். மற்றுமொரு அஷ்ரப் இவர்தான்.

    ReplyDelete
  12. Good work and we are always with you.

    ReplyDelete
  13. All praise to be Allah Almighty. Your courage is todays need. We need many more Asath Sallys. Surely you are inspiring. We pray for your health, wealth and success and long life.
    -.... a proud HBZ collegue.

    ReplyDelete

Powered by Blogger.