Header Ads



சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைசெல்ல அனுமதி


சவுதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளான இலங்கைப் பணியாளர்களை விரைவில் அழைத்துவரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியாளர்களை இலங்கைக்கு அழைத்துவர சவுதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளான சுமார் 6000 இலங்கையர்கள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

அவர்களை அடுத்த வாரம் முதல் கட்டங்கட்டமாக இலங்கைக்கு அழைத்துவர உத்தேசித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தொழில்களை இழந்து அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள பணியாளர்கள் தொடர்பில் மாத்திரம் விசேட கவனம் செலுத்த பணியகம் தீர்மானித்துள்ளது.

நிர்க்கதிக்குள்ளானவர்கள் தாம் பணியாற்றிய இடத்திலிருந்து தப்பிச்சென்று வேறு தொழில்களில் ஈடுபட்டமையால் சவுதி அரேபியாவில் வாழும் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். nf

1 comment:

  1. onruma nadppatah tereyavellsy inku embasseyal tikkattukku kasse kadkenrrarhl valyummellay kasem illay tederenrru vanda areveddaldan mehaum kasddamaha irukkenradu

    ReplyDelete

Powered by Blogger.