Header Ads



கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 10 மாடி வைத்திய கட்டடத்தொகுதி - மஹிந்த திறந்தார்



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்களின் வசதி கருதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பத்து மாடி வைத்திய கட்டடத்தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாயப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

602 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டடத்தொகுதிக்கானத்துக்கான பெயர் பலகையை  திரை நீக்கம் செய்த ஜனாதிபதி, இந்த புதிய வார்ட் தொகுதியில் முதலாவது நோயாளியையும் பதிவு செய்தார்.

 மேல் மாகாண சபை ஆளுநரான அஷ்ஷெய்க் அலவி மவ்லானா, அமைச்சர்களான மைத்திரிபால திஸாநாயக்க ,ஏ.எச்.எம்.பவுஸி ,நிமல் சிறிபால டி சில்வா, பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க , பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.அனில் ஜாசிங்க உட்பட மேலும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.




1 comment:

  1. மிகவும் நல்ல விடயம் இதில் பொறுப்புடன் செயல் பட்டு உழைத்த அனைவரையும் பாராட்டுகிறோம் நாடு முன்னேற நோயற்ற பிரஜைகள் கட்டாயம் தேவை. எமது நன்றிகள்

    ReplyDelete

Powered by Blogger.