Header Ads



நிதானமே எமது பெரிய ஆயுதம்...!


(கே.சி.எம்.அஸ்ஹர்)

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் என்றுமே ஏற்படாத புதுவித பிரச்சினைகளை எமது சமூகம் எதிர்கொண்டுள்ளது.இச் சந்தர்ப்பத்தில் எமக்குத் தேவையானவை பொறுமை,பிரார்த்தனை,நிதானம்,புத்திசாதுரியக்காய் நகர்த்தல்கள் போன்றவையே ஆகும்.

இப்பிரச்சினையின் தாக்கம் பெரும்பான்மையாக முஸ்ல்pம்கள் வாழும் பகுதிகளில் பெரிதாக தெரிவதில்லை.மிகவும் குறைந்த முஸ்லிம் குடும்பங்கள் வாழும் பகுதிகளில் அம்மக்கள் ஓவ்வொரு பொழுதையும் அச்சத்துடன் கழிக்கின்றனர்;.இம்மக்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டும்.நமது செயற்பாடுகளால் அவர்கட்கு ஒரு துன்பமும் வந்துவிடக்கூடாது.

ஹலாலில் தொடங்கி எமது கலாச்சாரத்திலும் கைவைக்கும் வரை  முஸ்லிம்கட்கு எதிரான பிரச்சினைகள் வளர்ந்து சென்றுள்ளன. 9.2 வீதமான முஸ்லிம்கள் எப்படி 74.4 வீதத்திற்கு மேற்பட்ட சிங்களரின் சனத்தொகையை எட்டிப்பிடிப்பார்கள் என்பது புரியாத பதிராக உள்ளது.9.2 வீதமான எமது சனத்தொகையில் நீரிழிவு நோயாளரதும்,இதய நோயாளிகளினதும் வீதம் 35க்கும் அதிகமாகவுள்ளது.இப்படி நிலைமையிருக்கும் போது ஒன்று,இரண்டு பேர் நான்கு திருமணம் செய்வதன் மூலம் நாடு முஸ்லிம்களின் வசம் சென்றுவிடும் என்ற பிரசாரம் எப்படி சரியாகும்.

ஒரு சிறிய பௌத்தக் குழுவே முஸ்லிம்களுக்கு எதிராகச்செயற்படுகிறது.மூன்று பௌத்த பீடங்களும் ,பாராளுமன்றத்தில் உள்ள அதிகமான சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும்,பல்கலைக்கழக மாணவர்களும்,பெரும்பாலான சிங்களப்பொதுமக்களும் முஸ்லிம்களுடன் சிறந்த உறவை இன்றும் பேணிவருகின்றனர்.பௌத்தமதம் அகிம்சையைப்போதிக்கும் அரசியலை வெறுக்கும் ஒரு வழிமுறையாகும்.கௌதம புத்தர் தனக்குரிய அரசியல் அதிகாரத்தையே துறந்துசென்றவர்.அண்மையில் சட்டக்கல்லூரி மாணவியின் பர்தாவை அகற்ற முயன்ற ஒருவருக்கெதிராக சிங்கள மாணவர்களே கிளர்ந்தெழுந்ததையும்,கண்டி பூஜாப்பிட்டியில் முஸ்லிம் ஒருவரின் தொப்பியை அகற்றியவருக்கெதிராக அப்பகுதி சிங்களமக்கள் செயற்பட்டதையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் ஒரு சிங்கள அரசனைக்காட்டிக்காட்டிக் கொடுத்தனராம்.கண்டி அரசன் இராஜசிங்கனைக் காட்டிக்கொடுக்காமல் தன் உயிரைத்தியாகம் செய்த பெண்ணைப்பற்றி யாரும் அறியாமல் இருக்கமுடியாது.என்னைக் காத்த ரெத்தம் என அரசனால் புகழப்பட்டு பங்கரகம்மன எனும் இரு கிராமங்களை முஸ்லிம்களுக்காக அரசன் பரிசாக வழங்கினான்.இங்கு ஒரு முஸ்லிம் தாயின் வயிற்றில் பிறந்தவன் வத்ஹிமி பண்டார இவன் தாயின் விருப்பப்படி பேருவலை சென்று இஸ்லாத்தைக்கற்றவன்.மூன்றாம் விஜயபாகுவின் பின் இவன் அரனானான் .இவனை மலையிலிருந்து தள்ளி கொலை செய்தவர்கள் யார்?இன்றும் அவரின் சமாதி குருனாகலில் அமைந்துள்ளது. ஆதை கலேபண்டார தேவஸ்தானய என அழைக்கிறார்கள்.

முஸ்லிம் கடைகளில் சிங்களவர்கள் ஆடைகள் வாங்கக்கூடாது ஏனெனில் அதில் சிங்களவரின் சனத்தொகையைக் குறைக்கும் வாசனைத்திரவம் தெளிக்கப்பட்டுள்ளதாம் .இதைக்கேட்டால் 2013ல் சிறந்த நகைச்சுவை இதுவாகத்தானிருக்கும்.சனத்தொகையைக்கட்டுப் படுத்துவதும், அதைக்கட்டுப்படுத்தத் துணைபோவதும் இஸ்லாமிய அடிப்படையில் பாவமாகும்.

முஸ்லிம் சாப்பாட்டுக்கடைகளிலும்,வீடுகளிலும் அன்னிய மதத்தவர்களுக்கு உணவு வழங்கும்போது அதனுள் எச்சில் துப்பிக்கொடுக்கிறார்களாம்.       இது ஒரு அடிப்படையற்ற முஸ்லிம் ஹோட்டல்களை குறிவைத்து தொடுக்கப்படும் தாக்குதலாகும. விருந்தினர்களைக் கண்ணியப்டுத்துவதும்,அவர்களுக்கு விருந்தளிப்பதும் இஸ்லாத்தில் மிகவும் நன்மைதரும் செயற்பாடாகும்.எமது செயல்களை இறைவன் பார்த்துக்கெண்டிருக்கிறான் என்ற கொள்கையுடையோர் முஸ்லிம்கள் மேற்சொன்ன இழிசெயலை ஒரு போதும் செய்யமாட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகம் மாட்டிறைச்சி சாப்பிடுகிறாரகள்.ஏனையமதத்தவர்களை கவலைகொள்ளச்செயவதற்காக முஸ்லிம்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. இஸ்லாமிய சமயத்தில் இறைச்சி சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விஞ்ஞான அடிப்பனடயிலும் மனிதனுக்கு வேட்டைப்பல் வழங்கப்பட்டிருப்பது இறைச்சி சாப்பிடுவதற்குத்தான்.

முஸ்லிம் பெண்கள் உடலை முடி கறுப்புநிற புர்கா,ஹபாயா போடுவது எம்மை அவமதிப்பது போலவுள்ளது.இது என்ன.ஆடையின்றியோ,அரைநிர்வானமாகவோ இருப்பதுதான் மற்றவரை அவமதிப்பது போல இருக்கும்.அவரவரின் கலாசார ஆடை அணிவது எப்படித்தவறாக முடியும்.

மத்ரஸாக்களிலும்,பள்ளிவாயல்களிலும் சாந்தி சமாதானம் என்பனவே கற்பிக்கப்படுகிறது.இதற்கு எதிரான கருத்துக்கள் அமெரிக்கா போன்ற நாடுகளின் கட்டுக்கதைகள்.

ஏமக்கெதிராக ஊடகங்களில் வெளிவரும் நச்சுக்கருத்துக்களுக்கு உரிய பதில்களை நாகரிகமாக முன்வைக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும் .உணர்ச்சிவசப்படச்செய்யும் கருத்துக்களையும், பௌத்தர்களை புண்படுத்தும் வசனப்பிரயோகங்களையும்.தவிர்த்துக்கொள்ள வேண்டும் நிதானமே எமது பெரிய ஆயுதம்.

எமது பிரதேச மக்களை ஆட்டிப்படைத்த கறீஸ்மேன் பிரச்சினை,எப்படி இலகுவாக முடிந்ததோ அதுபோல இதுவும் விரைவில் முடிந்துவிடும்.ஐநாவின் கழுகுப்பார்வை இலங்கைமீது உள்ள இவ்வேளையில் மீண்டுமொரு இனமோதல் ஏற்பட அரசும் ஒருபோதும் அனுமதிக்காது.ஐநா மனிதவுரிமைப்பேரவையில் இலங்கையின் மானத்தைக் காப்பாற்றியது முஸ்லிம் நாடுகளே.ஆடு உறவு குட்டி பகை என்று இனியும் இருக்கமுடியுமா?

இப்பிரச்சினையின் அடிப்படையே முஸ்லிம் வர்த்தகர்களுடன் உள்ள வியாபாரப்போட்டியே.சில பெரும்பான்மையின வியாபாரிகளே இதை பின்புலமாக நின்று நடாத்தி வருகிறார்கள்.இதை நீண்டகாலம் கொண்டு செல்ல சிங்கள பௌத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். 

No comments

Powered by Blogger.