Header Ads



கந்தளாய் நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் இஸ்லாமிய கலாச்சார விழா




(ஏ.எஸ்.எம். தாணீஸ்) 

 இஸ்லாமிய சிறார்களின் மத்தியில் நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும்  வளர்ப்பதோடு நவீன சியோனிச சக்திகளுக்கு எதிர்கொடுக்கும் ஆற்றல்மிகு இளம் சமூகத்தை உருவாக்கும் சீரிய பணிக்காக அஹதியா பாடசாலை நாடு முழுவதிலும் இயங்கி வருகிறது.என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் ஜூனைட் (நளீமி) தெரிவித்தார். 

     ஆயிஸா மகளிர் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற கந்தளாய் நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் இஸ்லாமிய கலாச்சார விழாவில் பிரதம அதிதீயாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.   
           
     நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் தலைவர் அமீர் சுல்தான் முஹம்மட் தாணீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

 இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் போட்டிபோட்டு இயங்குகின்றன அவைகளை உடைத்தெறிந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.

    அதேவேளை  அஹதியா பாடசாலையில் பரீட்சைத் திணைக்கத்தினால் நடத்தப்பட்ட இஸ்லாமிய சன் மார்க்க (அஹதியா) பாடசாலை இறுதி  சான்றிதழ் பரீட்சையில் இன்றுவரை பல மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.