Header Ads



'தூய தேரவாத பௌத்த நாடான இலங்கையை ஏகாத்தியபத்திய பிடியில் சிக்கவைக்க சதி'



(ஜே.எம்.ஹபீஸ்)

மகாசங்கத்தினரின் ஆலோசனைப்படியே துட்டகைமுனு அக்காலத்தில் எல்லாலன் ஆட்சியை வெற்றி கொண்டான். அது போல் ஜனாதிபதியும் பயங்கரவாதத்தை வெற்றி கொள்ளமுடிந்தது. தூய தேரவாத பௌத்த நாடான இலங்கையை மீண்டும் ஏகாத்திய பத்தியவாதிகளின் பிடியில் சிக்க வைக்க ஒரு சில நாடுகள் முயற்சித்து வருவதாகப் பிரதமர் டி.எம்.ஜயரத்னா குற்றம் சாற்றினார். 

ஹக்மன முலடியான பிரதேசத்தில் உள்ள பல்லேவெல கீர்த்திஸ்ரீ தேஜோவராராம  ரஜமகா விகாரையில்  இடம் பெற்ற ஒரு வைபவம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,

நாட்டில் 11200 பௌத்த மதஸ்தலங்கள் காணப்படுவதாகவும் அவை அனைத்தையும் புனித பூமியாகப் பிரகடணப்படுத்தும் சக்தி அரசிற்கில்லை.  அவ்வாறு புனித பூமியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பிறகு அவற்றை அபிவிருத்தி செய்யும் பணி அரசை வந்தடைகிறது. சம்புத்தத்வ வருடம் 2600 தொடர்பான நடவடிக்கைகளின் போது பாரிய அளவிலான மத ஸ்தாபனங்களை அரசினால் அபிவிருத்தி செய்ய முடிந்தது.

அவ்வாறு அபிவிருத்தி செய்த பௌத்த தலங்களுடன் தொடர்பு பட்ட குடிமக்கள், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், உட்பட அனைத்து வளங்கள் மற்றும் தகவல்களை ஒரு ஏடாக ஆவணப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இது எதிர்காலச் சந்ததியினருக்கு கற்றுக் கொள்ள வேண்டியப செய்திகளைத் தெரிவிக்கும் எனக் கருது கின்றேன்.

இலங்கை வரலாற்றில் 60 வருடங்கள் எல்லாளன் ஆட்சி இடம் பெற்றது. மகாசங்கத்தினரின் ஆலோசனைப்படி துட்டகைமுனு அதனை பௌத்த ஆட்சியாக மாற்றினான். இதே விதமாக கடந்த 30 வருட பயங்கரவாத ஆட்சியை மகாசங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் சகல இனங்களும் சமாதான மாக வாழும் ஒரு ஆட்சியாக மாற்ற முடிந்தது என்றார்.





No comments

Powered by Blogger.