Header Ads



கல்முனை மஹ்மூத் கல்லூரி தொடர்பில் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை


சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பது அப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்யும். இவ்வாறு  இலங்கை இஸ்லாமிய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முகம்மட் அனஸ் இவ்விடயம் பற்றித் தெரிவித்ததாவது,

கல்முனைப் பிரதேசத்தின் பிரபல பாடசாலையான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபர் ஒருவரை நியமிப்பிதல் பலகாலமாக இழுபறி நிலை தொடர்ந்து வந்து. அதிபர் நியமனப் பிரச்சினையானது நீதி மற்றம் வரை சென்று  நீதி மன்றின் தீர்ப்பையடுத்து, அதிபர் நியமத்துக்கான விண்ணபங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு, ஈட்டில் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 

அதிபராக நியமிக்கப்பட்டவர் கடமையைப் பொறுப்பேற்பதில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக 10 வருடங்கள் கடமை புரிந்த எச்.எம். பாறூக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக கடந்த வாரம்  நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அண்மைக்காலமாக கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்வதாக பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் குறிப்பிடுகின்றனர். பெற்றோர்களினதும் நலன்விரும்பிகளினதும் முறைப்பாடுகள், கோரிக்கைகளையடுத்து  இப்பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கும் பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் தகைமையும் அனுபமும் உள்ள ஒருவர் இப்பாடசாலையின்  அதிபராக நியமிக்கப்பட வேண்டுமென ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கெடுத்து வந்தன. 

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கம் என்பவற்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்;ட சங்கத் தலைவர் அனஸ், சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பதைத் தவிர்த்து, பாடசாலையின் முன்னேற்றம் கருதியும் மாணவர்களின் நலன் கருதியும் புதிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு பாடசாலைச் சமூகத்தை வேண்டிக்கொள்ளவாக அவர் மேலும் தெரிவித்தார்.


1 comment:

  1. ஒரு சிலரின் சொந்த இலாபங்களுக்கும் நலன்களுக்கும் சமூகத்தின் கல்விச் சொத்தான பாடசாலையை சீரழிப்பதைவிடுத்து பாடசாலையினதும் இரு ஊர்களினதும் பொது நலனை கருத்தில் கொன்டு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நன்நோக்கில் செயற்பட வேண்டும்.அற்ப சுயநலன்களை முதன்மைப்படுத்தி தேவையற்ற விதன்டாவாதங்களை கிளரிவிடுவதனால் பாதிக்கப்படுவது இரு ஊர்களினதும் எதிர்கால சந்ததிகள்தான்.எனவே இதற்கு உரிய காலத்தில் விரைவாக தீர்வுகள் முன்வைக்கப்படவேன்டும். பாடசாலையோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தீர்வை முன்வைப்பர் என்ற நன்நோக்கில் பொது மக்களும் கல்வி சாராத் தரப்பினர்களும் இதில் தலையிடுவதனைத் தவிர்ந்து கொள்கின்றனர். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அசமந்தத்தையும் சுயநலன்களையும் தொடர்ந்தும் வெளிக்காட்டிக்கொன்டிருப்பார்களாயின் இவர்களைப் புறந்தள்ளிவிட்டு ஊர்ப்பிரமுகள்கள் பள்ளிவாசல் சிர்வாகிகள் பொது அமைப்புக்கள் உலமாசபை மற்றுமுள்ள பொதுமக்கள் என்போர் சமுகத்தின் நலனுக்காக களத்தில் இறங்கவேண்டிய அவசியம் ஏற்படும். என்பதனை சம்பந்தப்பட்ட சரப்பினர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளுமாறு வினையமாக வேன்டிக் கொள்கின்றோம்.........

    ReplyDelete

Powered by Blogger.