Header Ads



நாட்டில் சீரற்ற காலநிலை தொடருகிறது - மண்சரிவு குறித்தும் எச்சரிக்கை


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 3 லட்சத்து 88 ஆயிரத்து 621 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
 .
இதனிடையே, தொடர்ந்தும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு, பொலநறுவை பிரதான பாதையின் போக்குவரத்துக்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்தும் நுவரஎலிய வெலிமடை பாதையின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடகப் பணிப்பாளர் சரத் லால் குமார குறிப்பிட்டுள்ளார்.

நுவரஎலியா, பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்காக கட்டட ஆராச்சி அமைப்பினால், விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹங்குரான்கெத்த-வெல்லகிரிய கிராமத்தைச் சேர்ந்த 25 குழும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது குடியிரப்புகளுக்கு அருகாமையில் உள்ள மேடு ஒன்று சரிந்து விழும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே, இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக நுவரஎலிய மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜி. குமாரசிரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.