Header Ads



65வது தேசிய சுதந்திர தினத்தை முஸ்லிம் சமூகம் அறிவுடமையுடன் எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும்


இன்னும் சில நாட்களில், அதாவது எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. இத்தேசிய சுதந்திர தினத்தை மிகச் சிறப்பான முறையில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கையிலும், பிரித்தானியாவிலும், சர்வதேச நாடுகளிலும் வாழுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளும், இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களும், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்களும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினரால் நன்கு திட்டமிடப்பட்டு பௌத்த மதத் தேரர்கள் சிலரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். 

நாளுக்கு நாள் தென்னிலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறு மிக அசுர வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு மத்தியில், முஸ்லிம்களான நமது நாட்டுப்பற்றையும், ஏனைய சமூகங்களுடனான சக வாழ்வையும் மேலும் வெளிப்படுத்தி இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உறுதிப்படுத்திக் காட்டுவதற்கு, எதிர்வரக்கூடிய இச்சுதந்திரதினத்தை நாம் மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறி மற்றும் மத வெறிச் செயற்பாடுகள் முளைவிட்டிருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்தில், எதிர்வரக்கூடிய 65வது தேசிய சுதந்திர தினத்தை எங்களது தேசப்பற்றையும், இந்நாட்டின் மீதான எமக்குள்ள உரிமையையும், இந்நாட்டின் நலன்களையும் நிலைநிறுத்துவதற்குக் கிடைத்த மிகப்பெரிய அரிய சந்தர்ப்பமாகவே நாம் கருத வேண்டும்.

எமது சமூகத்திற்கெதிராக இன்று இலங்கையில் வாழக்கூடிய பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு மத்தியில் முளைத்திருக்கும் ஒரு சிலரின் வெறுக்கத்தக்க செயற்பாடுகளுக்காக நாம் எமது அதிருப்தியையும், புறக்கணிப்பையும் வெளிப்படுத்துவது இச்சந்தர்ப்பத்தில் புத்திசாதுரியமான செயற்பாடாக இருக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இச்சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலமைக்கும், எமது தாயகத்தின் தேசியக் கொடியை கையில் எடுக்க வேண்டிய நிலமைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எமது நாடு சுதந்திரமடைந்த நாளான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதி பின்வரும் முறைகளில் நாம் நமது பங்களிப்புக்களைச் செய்து எமது தேசிய உரிமையை மீண்டுமொருமுறை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

1. நமது வீடுகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் பெரிய அளவிலான தேசியக் கொடிகளை ஏற்றுவதோடு நமது வாகனங்களிலும் தேசியக் கொடி 'Sticker'களை ஒட்டுதல்.

2. ஊரிலுள்ள பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், ஸாவியாக்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொதுவான இடங்களில் அன்றைய தினம் காலையில் தேசிய சுதந்திர தின அனுஷ்டானங்களை ஏற்பாடு செய்தல்.



No comments

Powered by Blogger.