Header Ads



முஹம்மது முர்ஸியின் 6 மாத கால ஆட்சி - 63 சதவீத எகிப்தியர்கள் திருப்தி


(தூது)  

இஹ்வானுல் முஸ்லிமீனை சார்ந்த டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்து நாட்டின் அதிபராக உள்ளார். இவரது கடந்த 6 மாத கால ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது பஸீரா ஆன்லைன் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 6 சதவீத மக்களின் ஆதரவு முர்ஸியின் அரசுக்கும், முர்ஸிக்கும் அதிகரித்துள்ளது.

முன்பு நடந்த சர்வேயில் 57 சதவீத மக்கள் மட்டுமே முர்ஸியை ஆதரித்தனர். தற்பொழுது 6 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் நல திட்டங்களை முர்ஸி தொடர்ந்தால் விரைவில் அவரது ஆதரவு 78 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முர்ஸியை ஆதரிப்பவர்களில் 40 சதவீதம் பேர் அவரது முடிவுகளை ஆதரிக்கின்றனர்.

23 சதவீதம் பேர் என்ன வந்தாலும் முர்ஸியை மட்டுமே ஆதரிப்பவர்கள் ஆவர். முர்ஸியை எதிர்ப்பவர்கள் 28 சதவீதம் பேர் ஆவர். அதில் 19 சதவீதம் பேர் முர்ஸியின் முடிவுகளை எதிர்க்கின்றனர். 9 சதவீதம் பேர் முர்ஸியையும், இஃவான்களையும் எதிர்ப்பவர்கள். மீதமுள்ள 9 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சர்வே கூறுகிறது.



1 comment:

  1. ஒரு நல்ல நேர்மையான இஸ்லாமிய ஆட்சியாளருக்கு அல்லாஹ் மஹ்சர் மைதானத்தில் நிழல் கொடுப்பான்.

    அல்லாஹ் உங்களை ஒரு நல்ல நேர்மையான இஸ்லாமிய ஆட்சியாளராகுவானாக, ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.