Header Ads



பிஸ்கட் பெட்டி கலாவதியாவது போன்று இந்த அரசாங்கம் 2014 இல் கலாவதியாகிவிடும்


அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பலைகள் வலுப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் 2014 வரையிலேயே நீடிக்கும். பிஸ்கட் பெக்கட் ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் கலாவதியாகும் திகதி காணப்படும். 

அதேபோன்று இந்த அரசாங்கம் கலாவதியாகும் திகதி அடுத்த ஆண்டாகும். டிசம்பர், ஜனவரி மாதத்தில் நாட்டில் நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதனை தீர்மானித்திருக்க வேண்டும். 

அத்துடன் அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடினால் மரக்கறி மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்விற்கு காரணம். கத்தரிக்காய் ஒரு கிலோ 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  

3 comments:

  1. ரணிலே நீங்களும் ஒரு பிஸ்கட் பெட்டி என்பதை மறந்துட்டயலோ ?

    நீங்க காலாவதியாகி பல வருடங்கள் சென்றுவிட்டன.

    உங்கள் நல்ல காலம்; சுகாதார பரிசோதகர்கள் உம்மை இன்னும் குப்பையில் வீசாதது?

    சும்மா நம்ம ஹிஸ்புல்லாஹ், ஹசன் அலி போலல்லாமல் பொறுப்புள்ள ஒரு எதிர் கட்சி தலைவர் போல பேசுங்க.

    ReplyDelete
  2. இவ்வளவு காலமும் இவருக்கு ஒரு பிரச்சினையும் தெரியல்ல கத்தரிக்க விலை உயர்வு SIRஐ பாதிச்சு இருக்கு

    ReplyDelete
  3. உங்களைப்போல ஒருத்தர் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறதுதான் மஹிந்தைக்கு சந்தோஷம்

    ReplyDelete

Powered by Blogger.