Header Ads



கற்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் படப்பிடிப்பில் ஈடுபட்ட 16 பேர் கைது


(Ad) கற்பிட்டி பிரதேசத்தில் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 16 பேர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கற்பிட்டி பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 12 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவர்களில் கற்பிட்டி பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் 11 பேரும் அமெரிக்க இளைஞர் ஒருவரும் அடங்குவர். 

இவர்கள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய வீடியோ கமரா உள்ளிட்ட சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  இத் திரைப்படத்திற்கான இயக்குனர் புறக்கோட்டையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

அனுமதியின்றி படப்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  எனினும் இவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

3 comments:

  1. பள்ளிவாசல் துறை என்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    பள்ளிவாசல் எனும் போது குறிப்பிட்ட இந்த செய்தி தவறான என்னத்தை வழங்குகின்றது.

    ReplyDelete
  2. The admins should understand even a comma can make a difference , i have seen these types of mistakes in several articles which posted here, below is a true story happens some where which explains even a comma can make a big deference

    There was a prisoner of war captured by some soldiers who were in a troop far from high officials.

    This is a true event but I cant find the original contents to post so i am writing in my own way, to make you friends feel the IMPORTANCE OF PUNCTUATION.

    I read an article in fun and fun concerning punctuation which reminded me of this event.

    Yes, so the soldier by some means, like telegraph or i dont know how wrote to the commander that the man (enemy) they were looking for was captured and they were waiting for orders as to what to do with him!

    The commander who was 500 kilometres away from the troop sent written message to another troop who in turn wrote that message to the concerned troop.

    The commander wrote this: " kill him not, wait for me."

    and when this message reached to the chief of the troop who had captured that soldier the message was written like this: " kill him, not wait for me."


    So you see friends thie chief understood according to the punctuation it meant to kill him and not to wait for him (the commander)

    whereas the commander had written to wait for him and not to kill.
    the difference was that the comma was misplaced!!
    in the message from the commander the comma was after the word 'not'
    whereas the message which reached the chief the comma was after the word 'him'

    and so it meant to kill and not to wait.

    so the comma KILLS!!!..........

    So admins please give some time to review the article for mistakes before you post here


    thank you

    ReplyDelete
  3. Katpitty Palli arukhil pallvasal thuraiai serntha pangal - May Be another innocence of Muslim - Just got to be careful

    ReplyDelete

Powered by Blogger.