Header Ads



தென்னாபிரிக்காவில் வெள்ளம் - 15.000 முதலைகள் தப்பியோட்டம்

தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால், முதலை பண்ணையிலிருந்து, 15 ஆயிரம் முதலைகள் தப்பி ஓடிவிட்டன. தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக் நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். லிம்போபோ மாகாணத்தில் உள்ள முதலை பண்ணையிலும், வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிவதற்காக, பண்ணையின் ஒரு கதவை திறந்து விட்டனர். இதன் மூலம் தண்ணீர் கணிசமாக வெளியேறியது. அப்போது, பண்ணையிலிருந்த, 15 ஆயிரம் முதலைகளும் தப்பி விட்டன. 

இந்த முதலைகள், அருகே இருந்த ரோஸ் நதியில் நீந்தி பல கி.மீ.,தூரம் சென்று விட்டன. இந்த விஷயம் தெரிந்ததும், பண்ணை நிர்வாகத்தினர், தப்பிய முதலைகள் ஏராளமானவற்றை பிடித்து வந்து விட்டனர். ஆனால், இன்னும் பாதியளவு முதலைகளை காணவில்லை. அவற்றை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில், முதலைகள் நடமாடுவதால், மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில், ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.