Header Ads



இடைவிலகும் மாணவர்களை பாடசாலையுடன் இணைக்கும் நிகழ்ச்சித்திட்டம் (படங்கள்)


(எஸ்.எல்.மன்சூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படும் மாணவர்களின் இடைவிலகளைத் தடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டம் தற்போது அட்டாளைச்சேனைக் கோட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இக்கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் இடைவிலகும் மற்றும் விட்டு விட்டு பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை பாடசாலையுடன் இணைத்து தொடராக பள்ளி சென்று கற்றலில் ஈடுபாடு காட்டப்படுவதன் அவசியம் பற்றிய செயற்றிட்டமொன்று அண்மையில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களும், உதுமாபுரம் தாறுல் ஹஸனாத் வித்தியாலய மாணவர்களும் இணைந்து அப்பிரதேசத்தில் இடைவிலகும் மாணவர்களையும், விட்டுவிட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களையும் இனங்கண்டு அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மாணவர்களின் வீதி ஊர்வலமும், வீதி நாடகம் போன்றனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

யுனிசெப் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் இணைப்பாளராக அக்கரைப்பற்று உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் நெறிப்படுத்தலின்கீழ் அக்கரைப்பற்று வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசியரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர் என். சம்சுதீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வித்தியால அதிபர்களான எம்.எஸ். பாஹிம், எஸ். லாஹிர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சகபாடிக் குழுக்கள் மூலமாக வீடுவீடாகச் சென்ற மாணவக் குழுக்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். சிறுவர்கள் உரிமைகள், கற்றலில் பெற்றோர்களது பங்கு போன்ற வாசங்கள் அடங்கிய சுலோகங்களையும் மாணவர்கள் தாங்கிச் சென்றனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.







No comments

Powered by Blogger.