Header Ads



வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் - யாழ்ப்பாணத்தில் நினைவுநாள் (படங்கள்)


யாழ் முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டுவைக்கப்பட்டு (30-10-2012 செவ்வாய்கிழமை) 22 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த நிலையில் குறித்த புலிகளின் பலவந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையினை நினைவுகூரும் வகையில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சமேளனம் யாழ்ப்பாணத்தையும் வெளிமாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதற்கமைய நேற்று ஒக்டோபர் 30ம் நாள் யாழ் ஜின்னாஹ் மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்ட நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த தினத்தில் வட இலங்கையில் நிலவிய தாழ் அமுக்க காலநிலை காரணமாகவும் அடை மழை காரணமாகவும் குறித்த நிகழ்வு  யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகவிற்கு யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் சகோதரர் நிலாம் தலைமை தாங்கினார். நிகழ்வின் வரவேற்புரையினையும், அறிமுக உரையினையும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரனி எம்.எம்.றமீஸ்  நிகழ்த்தினார்கள். 

 நிகழ்வில் பங்கேற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் பணிப்பாளரும் உரையாற்றினார்.

இறுதியாக நன்றியுரையில் சம்மேளனத்தின் முன்னை நாள் தலைவர் எம்.யூ.எம்.தாஹிர், புலிகள் எம்மை 1990களில் வெளியேற்றியதை தவறு எனப்புரிந்துகொண்டார்கள், அதற்காக அவர்கள் மன்னிப்பும் கோரினார்கள், ஆனால் இன்று ஒரு சில அரச அதிகாரிகள், ஊடகங்கள் புலிகளை விடவும் மோசமாக முஸ்லிம்களை மீளக்குடியேற்ற விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். எனவே இவர்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் மஹிந்தவின் அரசு இவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை நான் எனது நன்றியுரையில் வலியுறுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்து அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.

முழுமையான நிகழ்வுகளையும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலளார் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப்  வழிநடாத்தினார்கள். நிகழ்வுகள் துஆவுடன் இனிதே மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தன.







2 comments:

  1. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன். நிகழ்வுகள் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரு தகவல் மட்டும் இந்த செய்தியில் இடம்பெறவில்லை, இது ஊடகவியலாளர்களின் தவறாக அல்லது திட்டமிட்ட செயலாக இருந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. எனவே அந்த தகவலை இங்கு இணைத்துக்கொள்ள வேண்டும். அங்கே உரை நிகழ்த்திய செல்வவடிவேல் ஆசிரியர் (இங்கே அவரது படம் நான்காவதாக இருக்கின்றது) அவர்கள் சொன்னார்கள் "பேராசிரியர் குறிப்பிட்டதைப் போன்று யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் முஸ்லிம்கள் உடனடியாக மீளவும் குடியமர்த்தப்படவேண்டும். இந்த இடிபாடுகளுடன் கூடிய பிரதேசங்களில் மக்கள் குடியேறுவதை விடவும் காணிகளை விற்பதில் குறியாக இருக்கின்றார்கள். காணிகள் விற்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்" இந்தக் கருத்தோடு நான் முழுமையாக உடன்படுகின்றேன். ஆனால் இந்த பிரதேசத்தில் எனது சிறுபராயம் முதல் வசிக்கின்றவன் என்ற வகையில் ஒரு உண்மையை இந்த இடத்தில் சொல்வது எனது கடமை என எண்ணுகின்றேன். இந்த முஸ்லிம் வட்டாரத்தின் இடிபாடுகளுக்கும் தமிழ் சமூகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற உண்மைதான் அது. இந்த இடிபாடுகளுக்கு காரணமானவர்கள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும் என மிகவும் உறுதியாக அறுதியிட்டுக் கூறினார். அப்போது சபையில் கரகோஷம் எழுந்தது. ஆனால் செல்வ வடிவேல் அவர்களின் கருத்து உங்கள் செய்தியில் இடம்பெறவில்லை. இதனை இணைத்துக்கொள்ளவும்.
    முஹம்மது றசீன் ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர், யாழ்ப்பாணம்

    ReplyDelete
  2. செல்வா வடிவேலுடைய உரை சில விடயங்களை நமக்கு உணர்த்துகின்ற போதிலும் யாழ் முஸ்லிம்களின் வீடுகளை உடைத்ததில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் பங்கு பற்றினார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிய சில நயவஞ்சகர்கள் தான் 60 சத விகிதத்துக்கும் மேலான வீடுகளை உடைத்து சமுதாயத்தின் மீள் குடியேற்றத்துக்கு ஆப்பு மணி அடித்தவர்கள். இன்று சிலர் அவர்களுக்கு பின்னால் வால் பிடித்து நிட்பது வேதனையானது. சில இணையத்தளங்கள் கூட அவர்களுக்கு சார்பான செய்திகளை வெளியிட்டு தமது மடமையை பகிரங்கப் படுத்தியிருந்தனர். அது ஒருபுறம். மறுபுறம் மீள் குடியேற்றத்துக்காக படு படும் நியாஸ் , ரமீஸ் , சுபியான் போன்றவர்களையும் தாக்கி எழுதி அவர்களின் ஆர்வத்தை இல்லாதொழித்து விட்டார்கள்.
    இன்றைய மீள் குடியேற்றத்தின் எதிரிகள் தலைமைத்துவ ஆசை பிடித்து அலையும் சில விஷ கிருமிகளே.
    இவர்களது அடிதடியை சகிக்க முடியாமல் சீனி ரவுப் , அஜுமைன் போன்ற பத்து குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
    எனவே மீள் குடியேற்றம் வெற்றி பெற தலைமைத்துவா ஆசையையும் வெறியையும் சிலர் விட்டு விட வேண்டும்.
    மீள் குடியேற்றத்துக்காக பாடுபடுபவர்கள் மீது குற்றச் சாட்டுகளை முன்வைக்கக் கூடாது.
    தவ்ஹீத், சலபி ,ஏத்தாலை குரூப் போன்ற புதிய மத்ஹபுகளை யாழ்பாணத்தில் உருவாக்கி ஒற்றுமையை கெடுக்கக் கூடாது.
    முதலில் எல்லோரையும் தொலைக் கூடியவர்களாக மாற்றுங்கள் . அப்புறம் ஹதீசிலுள்ள எழுத்துப் பிழைகள் என்று நீங்கள் சொல்பவற்றை மாற்றலாம்.
    தட்போது ஏனைய பிரதேசங்களில் வசதியாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காணிகளை வைத்திருந்தாள் அதில் ஒரு காணியை மீளக் குடியேற விரும்பும் ஒருவருக்கு அளியுங்கள்.
    முடிவாக செல்வவடிவேல் சொன்னதில் பள்ளிவாசல்கள் பாடசாலைகளை தமிழர்கள் உடைக்க வில்லை என்பது உண்மை. உடையவனை விரட்டி கவனிப்பாரற்ற கானிகளாக்கிய புலிகள் தான் முழு அழிவுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களை பெற்று வளர்த்து சரியான வழிமுறைகளை கற்றுக் கொடுக்காத அவர்களின் பெற்றோர் இரண்டாம் கட்ட பொறுப்பேற்க வேண்டும். புலிகளுக்கு விசக் கருத்தூட்டிய ஆலோசகர்கள் அரசியல் வாதிகள் அதிகாரிகள் மூன்றாம் கட்ட பொறுப்பேற்க வேண்டும்.
    முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதை இன்று வரை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் தடுத்துக் கொண்டிருக்கும் சில தமிழ் தலைவர்களும் அரசியல் வாதிகளும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.