Header Ads



அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் (முழு விபரம் இணைப்பு)



(எஸ்.எல். மன்சூர்)

இம்முறை வெளிவந்துள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்பிரகாரம் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் காணப்படும் 22பாடசாலைகளிலிருந்து 612மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 15பாடசாலைகளிலிருந்து 111 மாணவர்கள் அதிகூடிய புள்ளிகள் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளும், மாணவர்களும் முறையே வருமாறு ,

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி – 39 மாணவர்கள்.

அல்முனீறா பெண்கள் உயர்பாடசாலை – 10, 

அறபா வித்தியாயலம் - 03, 

சஹ்றா வித்தியாலயம் - 02, 

அந்நூர் மகா வித்தியாலம் - 16, 

அர்ஹம் வித்தியாலம் - 6, 

ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலம் - 09, 

பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலம் - 08, 

அல் ஹிக்மா வித்தியாலம் - 01, 

ஒலுவில் அல் அஷ்ஹர் வித்தியாலயம் - 02,  

இக்றஃ வித்தியாலயம் - 07, 

சஉத் பாத்திமா வித்தியாலம் - 02, 

அஸ்ரப்நகர் அல்-அக்ஸா வித்தியாலயம் - 02, 

பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலயத்திலிருந்து 02 மாணவர்களுமாக தெரிவாகியுள்ளனர். 

இவர்களில் 53 ஆண் மாணவர்களும், 58 பெண் மாணவிகளுமாவர். மேலும் 100புள்ளிகளுக்கு மேல் 350மாணவர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அடைவுமட்டத்தினை அடைந்து கொள்வதற்கான அயராது பாடுபட்ட அட்டாளைச்சேனைக் கோட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி அல் - ஹாஜ். என.கே.எம். இப்றாகீம் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் ஆகியோருக்கு கல்விச் சமூகமும், பெற்றோரும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர். 

ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டல், பாடசாலைகளின் துரித வளர்ச்சி, பிள்ளைநேயத்தின் ஊடாக அபிவிருத்தி காணப்பட்டுவரும் பாடசாலைகள், சிறுவர் உரிமைகள் போன்றன முன்னெடுக்கப்பட்டுவரும் இக்கால கட்டங்களில் வகுப்பறையில் ஆசிரியர்களின் கற்பித்தல் யுக்தி, அதிக பயிற்சிகள், தொடரான செயற்பாடுகள் போன்றனவும் இவ்வடைவுக்கு உந்து சக்தியாக அமைகின்ற எனவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.