Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுதலும், தவறான கருத்துக்களும் (படங்கள் இணைப்பு)

படஉதவி - தமிழ் சீ.என்.என்.

யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக தமது பூர்வீகப் பிரதேசத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்பட்டனர்.  தற்போது அந்த முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடனும், மற்றும் பல நிகழ்ச்சி நிரலுக்கமையவும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட போலிப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மாடு வெட்டி விற்பனை செய்வது பற்றிய விவகாரத்தை சிலர் தற்போது கையிலெடுத்திருப்பதை நோக்கமுடிகிறது. யாழ் முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுவது ஒன்றும் புதிதாக உருவானதல்ல. யாழ்ப்பாண முஸ்லிம்கள் எப்போது யாழ்ப்பாணத்தில் குடியேறினார்களோ அன்றிலிருந்தே அவர்கள் இதனைச் செய்துவருகிறார்கள்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலங்களிலும் ஏன் தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டினார்கள்தான். இதை யாரும் தடுக்கவில்லை. புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோதும் முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டினார்கள்.

முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு அல்லது ஆடு வெட்டுவதற்கு அந்த மாட்டையும், ஆட்டையும் விலைக்கு கொடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள்தான். 99 சதவீதமான முஸ்லிம் வியாபாரிகள் இன்றைய நிலையிலும் யாழ்ப்பாண தமிழர்களிடமிருந்துதான் வெட்டுவதற்காக மாட்டையும், ஆட்டையும் வாங்குகின்றனர். இது ஆதராங்களின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுமுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தற்போது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை குற்றமாக நோக்குவதும், அதற்கெதிராக அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிடுவதும் எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாத விவகாரமாகும்.

ஒரு உயிர்ப் பிராணியை இறைச்சிக்காக வெட்டும்போது பின்பற்றப்படவேண்டிய அழகிய நடைமுறைகள் குறித்து இஸ்லாமிய மார்க்கம் தெளிவான குறிப்புகளை முன்வைத்துள்ளது. சில முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் நடைமுறைகளை பின்பற்றாமை காரணமாக அது சிலவேளைகளில் சகோதர தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருக்காலம். அதற்காக யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் நாங்கள் இங்கு பொறுப்புடன் எமது வருத்தங்களை பதிவுசெய்கிறோம்.

ஒருசில முஸ்லிம்கள் செய்யும் தவறுக்காக முழு யாழ்ப்பாண முஸ்லிம்களை குற்றம் காண்பதும், அவர்களுக்கெதிரான கருத்துக்களை பரப்புவதும் ஊடக தர்மம ஆகாது. சட்டத்தை கையிலெடுக்கும் அதிகாரம் ஊடகங்களுக்கு இல்லை. யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார், அதிகாரிகள் உள்ளனர். யாழ்ப்பாண முஸ்லிம்கள் தவறான முறையில் மாடு வெட்டுகிறார்கள் என்றால் அதனை தடுத்துநிறுத்தும் அதிகாரத்தை பொலிஸார் பெற்றுள்ளனர்.

பொலிஸாரும், தமிழ் உயர் அதிகாரிகளும் இவ்விடயத்தில் நீதியாக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு. எனவே ஒரு மாடு வெட்டும் விவகாரத்தை இனமோதலுக்கு தூபமிடும் வகையில் இட்டுச்செல்வது தமிழ் - முஸ்லிம் உறவுக்கு ஆரோக்கியமாக அமையாது என்பதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

அதேவேளை ஊடக தர்மத்தில் நம்பிக்கை கொண்டுள்ள யாழ் முஸ்லிம் இணையம் தமிழ் ஊடகமொன்றில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுவது பற்றி வெளியாகிய 2 செய்திகளை இங்கு பதிவிடுகிறது.

யாழ்.கொட்டடிப் பகுதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொழுவத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவர் ஜரோப்பிய இனத்தைச் சேர்ந்த 2500 இறாத்தலுடைய மாட்டை வெட்டி விற்பனை செய்வதற்கு யாழ்.இந்து சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவமானது யாழ்.கொட்டடிப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றுள்ளது. பசுவதை செய்யும் இந்த முஸ்லிம் வியாபாரியை நோக்கி இன்று மாலை இந்து மதக் குருமார் மாட்டினை இறச்சிக்காக வெட்டவேண்டாம் என போர் கொடி தூக்கியுள்ளனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த மாட்டை வெட்டியே தீருவேன் என மாட்டின் உரிமையாளர் கத்தியையும் தீட்டி வைத்துக் கொண்டு நிற்கிறார். நாளை இந்த மாடு கொல்லப்படுமா அல்லது அதன் உயிர் காப்பாற்றப்படுமா? என்பது நாளை வரை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

........................................................................................................................................................

சிவபூமி என்று போற்றப்பட்ட எங்கள் மண்ணில் காலனித்துவ ஆட்சியாளர்கள் மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை உண்வர்களாக இருந்தனர். இதனால் நம்மவர்கள் பட்ட வேதனையும் துன்பமும் சொல்லுந்தரமன்று. பசுவைத் தெய்வமாக வழிபடும் மரபுடைய சைவர்கள் தங்கள் முழுமுதற் கடவுளான சிவனை எருது வாகனன் என்று போற்றித் துதி செய்தனர்.

நந்திக் கொடி தமிழர்களின் இனத்துவக் கொடியாக திகழ்கின்றது. எனினும் கால மாற்றங்கள் எங்கள் மண்ணில் மாட்டிறைச்சிக் கடைக்கும் இடம் ஒதுக்கின. என்ன செய்வது! ஆமையை அடித்தால் அது மகா குற்றம். கெளதம புத்தரின் அவதாரம் என்பதால் அதற்கு அப்படியயாரு உயர்ந்த விதி. ஆனால், சைவ மக்களின் வழிபாட்டிற்குரிய மாட்டை அடித்தால் யாருமே கேட்க மாட்டார்கள்.

இதில், மிகப் பெரும் வேதனை என்னவெனில் நாளைய தினம் சூரியோதயத்திற்கு முன்னர் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘காளை மாடொன்று’ வெட்டப்படவுள்ளது.  சுமார் ஆயிரம் கிலோக்கிராம் எடையுடைய இந்த மாட்டின் இறைச்சியை விற்பனை செய்வதற்காக கடை உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.

மாட்டிறைச்சி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக இன்று காலை தொடக்கம் மாலைவரை அந்த மாட்டை பார்வையிட முடியும் என்ற அறிவித்தலும் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னே கொடுமை! மாடு கொல்லப்படுவதை எதிர்த்து தமிழகத்துக்குச் சென்ற மகாஞானிகள் வாழ்ந்த இந்த சைவ பூமியில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு, மாட்டை கண்காட்சிக்கு வைத்து அதனை அடித்துக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக இப்படியொரு ஏற்பாடு.  ஓ! தெய்வமே, நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்.மண்ணில் உள்ள பல ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்ற வேளையில், இந்தத் துன்பமும் நடந்தேறப் போகின்றது.

ஐரோப்பாவில் இருந்து அரசாங்கப் பண்ணைக்காகக் கொண்டு வரப்பட்ட இந்தப் பெருங் காளை மாட்டை விற்பனை செய்வதற்கு முனனதாக அது பற்றி ஏதேனும் மக்கள் கருத்தை அரச பண்ணை நிர்வாகம் கேட்டிருக்கலாம்.
தவிர, அதனை வாங்கியவர் தனது வியாபாரத்திற்காக துண்டு பிரசுரம் வெளியிட்டதாகக் கூறி நியாயத்தைத் தேடலாம். ஆனால், மிகப் பெரியதொரு காளை மாட்டை- கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற காளை மாடு இலங்கைப் பண்ணைகளில் இருந்ததில்லை என்ற அந்தத் துண்டுப்பிரசுரத்தின் பெருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு; நாளை உயிர் துறக்கவுள்ள அந்தக் காளை மாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

அதோ! கதறுகிறது காளை மாடு. என்னருமை தமிழ் மக்களே! யுத்தம் என்றபோது நீங்கள் என்தாய் நாடாம் ஐரோப்பாவுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்தீர்கள். என் தாய் நாடு உங்களை வாழ வைத்தது. ஆனால் நானோ, ஐரோப்பாவில் இருந்து உங்கள் மண்ணிற்கு நல்லின மாடுகளின் இனப் பெருக்கத்திற்காக வந்தேன்.’ அவ்வாறு வந்த எனக்கு நீங்கள் தரும் சன்மானம் தான் என்ன? என்னைக் காப்பாற்றுமாறு யாழ்.அரச அதிபருக்கும், யாழ்.மாநகர முதல்வருக்கும் கருணை மனு அனுப்ப இந்த காளை மாட்டுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதா என்ன? ஜீவகாருண்யஸ்தர்களே! என்னைக் காப்பாற்றுங்கள். இது அந்தக் காளை மாட்டின் கதறல்.


6 comments:

  1. இது என்ன கொடுமை. தமிழர்கள் இன்னும் எத்தனை காலம்தான் முட்டாள்களாக இருப்பார்கள்.

    ReplyDelete
  2. யாழ் முஸ்லிம் இணையத்திற்கு!

    பக்குவமாக விடயத்தை சொல்லியிக்கிறீர்கள் - நன்றி.

    சுலைமான்
    தெஹிவளை

    ReplyDelete
  3. யாழ் எம். நகீப்
    லண்டன்

    தமிழர்கள் கோயில்களில் விலங்குகளை உயிர்ப்பலி எடுப்பதற்கு எதிராகவும் எழுத வேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணத்தில் ஒரு மேர்வின் சில்வா வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத கருத்துக்களை பரப்பிவரும் தமிழ் ஊடகங்களை புறக்கணிப்பதே முஸ்லிம்களுக்கு சிறந்தவழியாகும்.

    தமிழ் ஊடகங்களிலிருந்து செய்திகளை தமது பேஸ்புக்கில் போடும் SHARE முஸ்லிம்கள் இனியாவது திருந்துவர்களா..??

    ReplyDelete
  4. Dear fellow muslims,

    I agree that it is allowed to slaughter cattle for human consumption, while doing this we have to adhere certain things.
    Cattle should not be slaughtered in SL on poya days.
    Cows can't be slaughtered.
    The butcher has to get the approval from the vet.surgeon of the area.

    Since we in the process of resettling, and everybody is talking about reconciliation amongst the communities, May I suggest the following!

    The owner of the cattle can postpone the slaughtering of the animal since it's being their important day.

    He can even stop slaughtering if the worried community offers to pay the full amount for the animal with damages.

    He could have avoided advertising the slaughter. We allowed to perform our religious rights in SL. When the rights are misused only, people fall into trouble.

    FINALLY A QUESTION TO THESE TAMIL MEDIA PERSONAL

    WHERE WERE YOU DARLINGS, WHEN ANIMALS AND BIRDS ARE SACRIFICED AT YOUR OWN HINDU TEMPLES.

    HYPOCRISY ISN'T IT ?

    Muhajireen Colobmo

    ReplyDelete
  5. இந்து மதத்தில் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று எங்கே இருக்கிறது? அவர்களின் வேத நூல்களில்கூட இல்லை.

    - நமோ நமோ மாதா

    ReplyDelete
  6. முஸ்லீம்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
    இறைச்சிக்காக மாடு அறுப்பதில் தவறில்லை. அதே நேரத்தில்
    மாட்டை தெய்வம் என்று மடத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும்
    மக்களின் மனது புண்படாதபடி நடந்துகொள்ள வேண்டும்.

    குறித்த மாட்டை வழமைக்கு மாறாக பகிரங்க காட்ச்சிப் பொருளாக்கியமை,
    துண்டுப் பிரசுரம் அச்சிட்டு விளம்பரப் படுத்தியமை என்பன
    வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்ற செயல்களே.

    எப்படியாவது முஸ்லீம்களை சிக்கலில் போட வேண்டும், முஸ்லீம்களின் மீது
    வெறுப்பை கொட்ட வேண்டும், இஸ்லாம் பற்றி தப்பபிப்பிராயத்தை
    உண்டு பண்ண வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கின்ற
    விதமாக நடந்து கொள்ளக் கூடாது.

    அதே நேரத்தில் மாட்டை தெய்வமாக நினைக்கும் மக்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    மாடுகளை நாம் இறைச்சிக்காக அறுக்காவிட்டாலும், சிங்கம் புலி என்பவை மாட்டை வேட்டையாடுவதை
    உங்களால் தடுக்க முடியாதே? ஏன் கடவுள் கூட தடுப்பதில்லையே.

    ஆகவே வீணாக பிரச்சனைகளை வலிய உண்டுபண்ணாதிருப்பீர்களாக

    ReplyDelete

Powered by Blogger.