Header Ads



அமெரிக்காவில் வலுப்பெறும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது


இஸ்ரேல்- பாலஸ்தீன  போர் நிலைக்கு மத்தியில் அமெரிக்கநகரங்களில் பாலஸ்தீனா ஆதரவு போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.


இந்நிலையில் அமெரிக்க பல்கலைகழகங்களில் இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


அமெரிக்காவின் அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உற்பட ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.


தென்கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான தொடர்பை துண்டிக்கவேண்டும் என கோரி நியுயோர்க்கின் கொலம்பியா பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைகழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், கலிபோர்னியாவில் யுசிபேர்க்லே மற்றும் யுஎஸ்சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால் பல்கலைகழகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments

Powered by Blogger.