Header Ads



யாரையும் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை


பணியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் தன்னிச்சையாக கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன்,விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்திருந்தது.

இந்நிலையில்,இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வழக்குடன் தொடர்புடைய பொலிஸ் சாஜன் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரிய நிலையில்,விடுமுறை கிடைக்காததால் கடும் மன அழுத்தத்தில் இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது தாயார் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தியதில் குறித்த சாஜன் அவ்வாறான விடுமுறை எதுவும் கோரவில்லை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பணியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், யாரையும் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் பொலிஸார் விலைமதிப்பற்ற நான்கு உயிர்களை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பொலிஸ் உயர் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும், அவர் குணமடைந்த பின்னர் மேலதிக விபரங்கள் தெரியவரும் எனவும்,இச்சம்பவத்தால் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  TW

2 comments:

  1. கள்ளக்கூட்டத்தின் குடும்பத்தில் இல்லாவிட்டாலும் படுபொய் சொல்லும் கூட்டத்தில் முன்னணியில் உள்ளவர் இவர்.

    ReplyDelete
  2. கள்ளக்கூட்டத்தின் குடும்பத்தில் இல்லாவிட்டாலும் படுபொய் சொல்லும் கூட்டத்தில் முன்னணியில் உள்ளவர் இவர்.

    ReplyDelete

Powered by Blogger.