Header Ads



"அடுத்த வருடம் ஏப்ரலில், ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்" - விஜயதாஸ


"நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்." என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

"நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகின்றது. மக்கள் மத்தியில் நெருக்கடியும், வன்முறையும் தலைதூக்கியுள்ளன. மக்களை அடக்கி அரசால் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எனவே, எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்தினுள் பாரிய ஆட்சிக் கவிழ்ப்பொன்று இடம்பெறும். அவ்வாறு இல்லையேல் அரசுக்குள் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்" என தெரிவித்துளார்.

அதேவேளை, தற்போதைய அரசின் செயற்பாடுகளையும், பொருளாதாரத் திட்டங்களையும் அவர் கடுமையாக விளாசித்தள்ளியுள்ளார். 

1 comment:

  1. "நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்."


    Would he have said this if he was given a Cabinet post?

    ReplyDelete

Powered by Blogger.