Header Ads



நிபந்தனைகளை தூக்கிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகை - பல சுற்று பேச்சுக்களில் பங்கேற்பர்


ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று நாட்டை வந்தடையவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கான உறுதி, தொழிலாளர் நிலைமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகம் போன்றவற்றை முன்னெடுப்பது தொடர்பான நிபந்தனைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையினை தற்காலிகமாக மீளப் பெறுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.