July 18, 2021

முழங்கால் காயம் குணமடைந்து, வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு சென்றார் ரஞ்சன்


முழங்கால் காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சையின் பின்னர் அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாருமான (நிர்வாக) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

முழங்காலில் ஏற்பட்ட திடீர்  காயம் காரணமாக, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அவரது உடல்நிலை பூரணமாகக் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், மீண்டும் அவர் அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment