Header Ads



டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர், சமூகத்திற்குள் நடமாட கூடும் - PHI


டெல்டா வைரஸ் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிற்கும் பரவியிருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் எம் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்படாத நிலையில் சமூகத்திற்குள் நடமாட கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் வீதிகளில் பொதுமக்களை காணமுடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இது வைரஸ் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் சகாக்களுடன் பொதுமக்கள் தற்போது தொடர்புகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ள  அவர் தொடர்பிலிருந்திருக்க கூடியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக டெல்டா வைரஸ் சமூக்தில் பரவியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன,போக்குவரத்து தடைகள் நீக்கப்பட்டதும் பொதுமக்கள் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த தொடங்குவார்கள் அது வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.