Header Ads



ஜனாதிபதி அநுரகுமாரவை சந்திக்க அடம்பிடித்து, சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ரகளை


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞை கோபுரத்தின் எல் (L) வடிவ பகுதியில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


சனிக்கிழமை (05) கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த, நவ மஹாசென் புராவைச் சேர்ந்த 23 வயது இளைஞராவார்.


 கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள 20 அடி உயர போக்குவரத்து சமிக்ஞை கோபுரத்தில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்து ஜனாதிபதிக்காகக் காத்திருந்தார்.


ஒரு பொலிஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியது, ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


அந்த நேரத்தில், காலி  முகத்திடல் நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், கொழும்பு மாநகர சபை தீயணைப்பு இயந்திரத்தை அழைத்து, அதன் உதவியுடன் எந்தத் தீங்கும் ஏற்படாமல் சமிக்ஞை கோபுரத்தில் இருந்த நபரை இறக்கி கைது செய்தனர்.  

No comments

Powered by Blogger.