Header Ads



நாடளாவிய ரீதியில் 3 இலட்சம் பேர் போதைபொருளுக்கு அடிமை


நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டுகிறது.


4 புதிய புனர்வாழ்வு  மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.


21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தை பேராதனை பகுதியில் நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது..


குருணாகல், மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் புதிய மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.


புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.


வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவும் 250 மில்லியன் ரூபா நிதி இந்த வேலைத்திட்டத்திற்காக பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.